ஹேர் ஃபால் பிரச்சினைக்கு ஃபுல்ஸ்டாப் வைக்க உதவும் காலை பானங்கள்!!! 

Author: Hemalatha Ramkumar
10 December 2024, 4:29 pm

தலைமுடி உதிர்வு மற்றும் தலைமுடி உடைந்து போகின்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? இதற்கான சரியான தீர்வு உங்களுடைய உணவுதான். காலையில் ஒரு சில உணவுகளை சாப்பிடுவது உங்களுடைய தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, அதே நேரத்தில் தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, உங்கள் தலைமுடிக்கு பளபளப்பையும் சேர்க்கும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சாறுகள் மயிர் கால்களை வலுவாக்கி, தலைமுடி உதிர்வை குறைத்து, அதன் அமைப்பை மேம்படுத்தும். இந்த எளிமையான பானங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்ப்பது அழகான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை பெறுவதற்கான உங்கள் ஆசையை நிறைவேற்றும். அந்த வகையில் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை பெறுவதற்கு உதவும் அற்புதமான 5 காலை பானங்கள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

சோம்பு விதை கசாயம் 

சோம்பு விதை கசாயம் என்பது தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கான ஒரு சிறந்த பானம். ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த இந்த பானம் தலைமுடியின் மயிர் கால்களை வலுவாக்கி தலைமுடி உதிர்வை குறைத்து புதிய முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் இது மயிர்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தலைமுடிக்கு பளபளப்பை சேர்க்கிறது. ஒரு நாள் இரவு முழுவதும் சோம்பு விதைகளை ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிகட்டி குடிப்பது தலைமுடி வளர்ச்சியை இயற்கையான முறையில் ஊக்குவிக்கும்.

கற்றாழை சாறு 

அழகான தலைமுடி வளர்ச்சியை பெறுவதற்கு உங்களுடைய நாளை கற்றாழை சாற்றுடன் ஆரம்பியுங்கள். வைட்டமின்கள் A, C மற்றும் E நிறைந்த கற்றாழை சாறு மயிர்க்கால்களுக்கு தேவையான போஷாக்கை வழங்கி, புதிய முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. கற்றாழையில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் பொடுகு, அரிப்பு மற்றும் எரிச்சலை ஆற்றுகிறது. இதற்கு தினமும் 1/2 கப் அளவு கற்றாழை சாறு குடித்து வர பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய் சாறு 

தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த காலை பானம் கொலாஜின் உற்பத்தியை அதிகரித்து மயிர் கால்களை வலுவாக்கி, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. அது மட்டும் அல்லாமல் நெல்லிக்காய் இயற்கையான நச்சு நீக்கியாக அமைந்து பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனையை போக்குகிறது.

இதையும் படிச்சு பாருங்க:  மருதாணி டார்க்கா சிவக்க இந்த ஹேக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!!!

இஞ்சி தண்ணீர் 

உங்களுடைய தலைமுடி வளர்ச்சியை வேகமாக்க உங்களுடைய நாளை இஞ்சி தண்ணீருடன் துவங்குங்கள். இஞ்சி தண்ணீரில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பண்புகள் காணப்படுவதால் இது மயிர் கால்களை தூண்டி, புதிய முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. காலையில் இஞ்சி தண்ணீர் குடிப்பது தலைமுடியின் அமைப்பு, பளபளப்பு மற்றும் நீளத்தை மேம்படுத்துகிறது.

கேரட் ஜூஸ் 

இந்த காலை பானத்தில் வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் இது மயிர் கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைமுடி  வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சேதத்தை குறைத்து தலை முடியின் அமைப்பு மற்றும் பளபளப்பை அதிகமாக வருகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Dhanush Upcoming Project Dropped தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
  • Views: - 59

    0

    0

    Leave a Reply