இந்த ஹேபிட் இருக்கவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸ் இல்ல!!!
Author: Hemalatha Ramkumar15 January 2025, 4:22 pm
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகள் மட்டுமே நம்முடைய கொலஸ்ட்ரால் அளவுகளை பாதிக்காது. அதையும் தாண்டி நம்முடைய பழக்க வழக்கங்கள் கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிப்பது என்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். அதிக அளவு LDL, அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பது தமனிகளில் பிளேக் உருவாக காரணமாகி, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே உங்களுடைய கொலஸ்ட்ரால் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிட்ட சில காலை நேர பழக்க வழக்கங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரோடு நாளை துவங்குவது
உங்களுடைய நாளை வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் கொண்டு ஆரம்பியுங்கள். இந்த எளிமையான பானம் உங்களுடைய உடலை சுத்தம் செய்து லிப்பிட் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். எலுமிச்சைகளில் அதிக அளவு வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, தமனிகளில் பிளேக் உருவாவதை தடுக்கிறது. மேலும் இந்த பானம் நம்முடைய உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து நமக்கு ஆற்றலை தருகிறது.
நார்ச்சத்து நிறைந்த காலை உணவு
காலை நீங்கள் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பது அவசியம். சியா விதைகள் மற்றும் ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழ வகைகளில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இந்த நார்ச்சத்து கொலஸ்ட்ராலோடு பிணைந்து அது ரத்தத்தில் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இந்த பழக்கம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமல்லாமல் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் நீண்ட நேரத்திற்கு நமக்கு பசி எடுக்காது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
நட்ஸ் வகைகளை சாப்பிடுதல்
ஒரு கைப்பிடி அளவு பாதாம், வால்நட் அல்லது ஆளி விதைகளை உங்களுடைய காலை உணவில் சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த நட்ஸ் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொழுப்புகள் இருக்கிறது. இவை நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, அதே நேரத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
இதையும் படிக்கலாமே: முதுகு வலியை போக்க இது தான் சரியான வீட்டு வைத்தியம்!!!
உடற்பயிற்சி
காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உங்களுடைய மெட்டபாலிசத்தை துவங்குவதற்கான ஒரு அருமையான வழி. தினமும் உடற்பயிற்சி செய்வது நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து, ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றுகிறது.
எல்லா விஷயங்களிலும் கவனமாக இருத்தல்
நாள்பட்ட மன அழுத்தம் என்பது நம்முடைய கொலஸ்ட்ரால் அளவுகளையும், இதய ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே நீங்கள் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் அதிலும் குறிப்பாக காலை வழக்கத்தில் கவனமாக இருப்பது அவசியம். காலை நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் தியானம் செய்வது, மன அழுத்தத்தை குறைத்து, உங்களுக்கு மனத்தெளிவை அளிக்கும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி மன அழுத்த ஹார்மோன்கள் வெளியிடப்படுவதை குறைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.