எப்பவுமே ஃபிட்டாக இருக்கணும்னா இந்த 5 காலை பழக்கங்கள ஃபாலோ பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
27 September 2024, 4:21 pm

ஒவ்வொருவருக்குமே தங்களுடைய தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதற்கு நல்ல கட்டுக்கோப்பான உடல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நாம் பின்பற்றக்கூடிய ஆரோக்கியமான பழக்க வழக்கங்களின் விளைவாகவே நம்முடைய உடல் அமைப்பானது அமைகிறது. தொடர்ச்சியான காலை வழக்கத்தை நீங்கள் பின்பற்றி வரும் பொழுது அதுவும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றினால் நிச்சயமாக அதனை அடையலாம். கடினமான வொர்க் அவுட் பயிற்சிகள் மற்றும் குறிப்பிட்ட டயட் போன்றவற்றை பின்பற்றியும் தாங்கள் ஆசைப்பட்ட உடலமைப்பை பெற முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் இந்த எளிமையான காலை வழக்கத்தை பின்பற்றி தாங்கள் ஆசைப்பட்ட மாதிரியான உடல் கட்டமைப்பை பெறலாம். 

நீர்ச்சத்து அவசியம் 

உங்கள் உடலில் கொழுப்பு எரிக்கப்படும் செயல்முறையை தூண்டவும், தசைகளுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த எளிமையான காலை வழக்கமானது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கு உதவும். எனவே உங்களுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள். 

ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு 

உங்களுடைய நாளை ஆரம்பிக்க உதவும் காலை உணவில் மெலிந்த தசைகள் பெறுவதற்கு உதவிபுரியும் மெலிந்த புரதங்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். முட்டை, தயிர் அல்லது அவகாடோ பழங்கள் போன்றவை தசை வளர்ச்சியை அதிகரித்து உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரும் அதே நேரத்தில் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கும். 

காலை நேர நடை பயிற்சி உங்களுடைய நாளை ஒரு புத்துணர்ச்சியூட்டும் நடைபயிற்சியோடு ஆரம்பிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் கட்டுக்கோப்பான உடலை நிச்சயமாக பெறலாம். சூரியன் உதிக்கும் பொழுது நீங்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் அது உங்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி, கலோரிகள் எரிக்கப்பட்டு, தசைகள் உயிர்த்தெழும். ஆற்றலை அதிகரிக்கவும், நீங்கள் எதிர்பார்க்கும் மெலிந்த உடலை பெறுவதற்கும் இந்த பழக்கம் நிச்சயமாக உங்களுக்கு உதவும். 

நீட்சி பயிற்சிகள் 

காலையில் நீட்சி பயிற்சிகளை செய்வது நீங்கள் எதிர்பார்த்த ஃபிட்டான உடலமைப்பை  தருவதற்கு உதவும். காலையில் நீட்சி பயிற்சிகளை செய்வது உங்கள் உடலில் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நீங்கள் கை, கால்களை நீட்டும் பொழுது அது உங்கள் உடலை அந்த நாளுக்காக தயார் செய்கிறது.

யோகா மற்றும் தியானம்

யோகா மற்றும் தியானம் ஆகியவை உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பெரிய அளவில் கை கொடுக்கும். உங்களுடைய மனதை அமைதிப்படுத்தி ஒவ்வொரு பயிற்சியையும் நீங்கள் செய்யும் பொழுது உங்கள் உடலானது அதை மாற்றி அமைக்கிறது. உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, அதற்கு வலு கூடுகிறது. மேலும் உங்களுக்கு மன தெளிவு ஏற்பட்டு மெலிந்த உடல் அமைப்பை பெறுவீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!