ஒரு நரைமுடியை புடிங்கி எடுத்தா நிறைய நரைமுடி வளரும்னு சொல்றாங்களே அது உண்மையா…???

Author: Hemalatha Ramkumar
16 December 2024, 11:12 am

பொதுவாக எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உண்மையைக் காட்டிலும் புரளிகள் காட்டுத்தியைப் போல விரைவாக பரவும். இது அழகு சார்ந்த விஷயங்களுக்கும் பொருந்தும். அழகு சம்பந்தமான கட்டுக்கதைகள் ஏராளமானவை உள்ளன. இதனால் பலர் பொய்யை நம்பி எதிர்பார்த்த முடிவுகளை தராத அல்லது ஒரு சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் அழகு சார்ந்த பழக்கங்களை கூட பின்பற்றுகின்றனர். இதனால் பலருக்கு எது உண்மையில் வேலை செய்யும் எது வேலை செய்யாது என்ற கேள்வி எழுகிறது. எனவே இந்த பதிவில் பொதுவான சில அழகு சம்பந்தப்பட்ட கட்டுக்கதைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வெள்ளை முடியை பிடுங்கி விட்டால் வெள்ளை முடி அதிகமாக வளரும் என்ற பொதுவான ஒரு கட்டுக்கதை நிலவுகிறது. ஒரு வெள்ளை முடியை புடுங்கி எடுத்த மயிர் கால்களில் இருந்து அதிகப்படியான வெள்ளை முடி வளர ஆரம்பித்ததன் காரணமாக இந்த கட்டுக்கதை வளர ஆரம்பித்தது. ஆனால் இது உண்மை அல்ல. மரபணு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வயது காரணமாகவே தலைமுடி நரைத்துப் போக ஆரம்பிக்கிறது.

முகப்பரு பிரச்சனையை தடுப்பதற்கு தோலை சூரிய வெளிச்சத்திற்கு காட்டுவது என்பது நீங்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய ஒரு ஆபத்து நிறைந்த கட்டுக்கதை. சூரிய வெளிச்சத்தில் இருந்து வெளியாகும் UV கதிர்கள் தற்காலிகமாக வீக்கத்தை குறைக்கலாம். ஆனால் இறுதியில் அது தோலை வறண்டு போக செய்து, சரும துளைகளை அடைத்து, மேலும் முகப்பருக்கள் அதிகப்படியாக ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் சூரிய வெளிச்சம் ஹைப்பர் பிக்மென்டேஷன், கரும்புள்ளிகள் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளையும் அதிகரிக்கும்.

பகல் நேரத்தில் மட்டுமே சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலான நபர்கள் நம்பி வரும் ஒரு மோசமான கட்டுக்கதை. UV கதிர்கள் ஜன்னல்கள் மற்றும் மேகங்கள் வழியாக நுழைந்து தோலுக்கு சேதம்  ஏற்படுத்தலாம். 80% வரையிலான UV கதிர்கள் கண்ணாடி வழியாக நுழைந்து சருமத்திற்கு வயதான அறிகுறிகளையும், புற்றுநோயையும் ஏற்படுத்தும் அபாயத்தை உண்டாக்கும். எனவே தினமும் எந்த வானிலை  அல்லது நேரமாக இருந்தாலும் சரி பிராடு ஸ்பெக்ட்ரம் கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம்.

இதையும் படிச்சு பாருங்க:  அல்டிமேட்டான டேஸ்ட்ல பாரம்பரிய ஆப்ரிக்க மீன் குழம்பு ரெசிபி!!!

அதிகப்படியான அல்லது தினமும் எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது தெளிவான சருமத்தை பெற உதவும் என்பது பலரால் நம்பப்படுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது சருமத்தை சேதமடைய செய்து, சிவத்தல், எரிச்சல் மற்றும் வறட்சியை உண்டாக்கும். அது மட்டுமல்லாமல் நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்தால் அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, அதனால் வீக்கம், முகப்பரு, ரோசேஸியா மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே உங்களுடைய சருமத்திற்கு தகுந்தார் போல ஒரு வாரத்திற்கு 1 முதல் 3 முறை மட்டுமே எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது நல்லது.

அடிக்கடி தலைமுடியை வெட்டினால் தலைமுடி நன்றாக வளரும் என்பது முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதை. முடி வளர்ச்சி என்பது மயிர் வேர்களில் ஆரம்பிக்குமே தவிர முனைகளில் அல்ல. அடிக்கடி தலை முடியை வெட்டுவது ஸ்பிலிட் எண்டு மற்றும் முடி உடைந்து போவதை தவர்க்கும். ஆனால் அது தலைமுடி வளர்ச்சியை எந்த விதத்திலும் ஊக்குவிக்காது. உங்களுடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு வழக்கமான முறையில் நீங்கள் அதனை ட்ரிம் செய்யலாம். ஆனால் அதனால் உங்களுக்கு எந்த ஒரு வளர்ச்சி சார்ந்த பலன்களும் கிடைக்காது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!