ஆரோக்கியம்

மொபைல் அதிகமா யூஸ் பண்ணா கிட்டப்பார்வை ஏற்படுமா… கண் ஆரோக்கியம் குறித்த கட்டுக்கதைகளும், உண்மைகளும்!!!

கிட்ட பார்வை என்று அழைக்கப்படும் மயோபியா தற்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்து வருகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் நம்முடைய வாழ்க்கையோடு சாதனங்கள் ஒன்றிணைந்து விட்டதால் உலகம் முழுவதும் மயோபியா ஏற்படுவது அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் கண்ணாடி அணிவது அரிதாக இருந்தது. ஆனால் இன்றோ இது ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. இந்த தலைமுறையில் பலர் தங்களுடைய முகங்களில் கண்ணாடியை அணிவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த பதிவில் கண் ஆரோக்கியம் குறித்த ஒரு சில கட்டுக் கதைகள் மற்றும் உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

கட்டுக்கதை: ஸ்கிரீன் டைம் அதிகரிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே மயோபியா அதிகரித்துவிட்டது. 

உண்மை: சாதனங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் கண்களில் அழுத்தம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இது மட்டுமே மயோபியா ஏற்படுவதற்கான காரணமாக இருக்காது. மாறாக அது மரபணுக்கள் மற்றும் வீட்டிற்கு வெளியே குறைவான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் காரணமாகவே ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வீட்டிற்கு வெளியே அதிக நேரத்தை செலவு செய்வதன் மூலமாக குழந்தைகளில் கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம் என்று ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கதை: ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி கிட்டப்பார்வையை ஏற்படுத்துகிறது மற்றும் தீங்கானது. 

உண்மை: கட்டுக்கதைக்கு புறம்பாக, நீல ஒளி நம்முடைய கண்களில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஸ்கிரீன்களை அதிகமாக பயன்படுத்துவதால் நம்முடைய தூக்கம் பாதிக்கப்பட்டு உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்காமல் போகிறது. இதனை தவிர்ப்பதற்கு ப்ளூ லைட் ஃபில்டரை உங்களுடைய சாதனத்தில் பயன்படுத்தலாம் அல்லது படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

கட்டுக்கதை: ஸ்கிரீன்களில் படிப்பது பேப்பரில் படிப்பதை விட மோசமானது. 

உண்மை: நீங்கள் ஸ்கிரீனிலோ அல்லது பேப்பரிலோ எதில் படித்தாலும் சரி இது கிட்டப்பார்வையை ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக படிப்பதற்கு நீங்கள் செலவு செய்யும் நேரம் மற்றும் உங்கள் கண்களுக்கு அருகில் நீங்கள் அந்த பொருளை எவ்வளவு அருகில் வைத்துள்ளீர்கள் என்பதை பொறுத்து கிட்ட பார்வை ஏற்படும். எனவே நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தை பார்த்துக் கொண்டே இருப்பது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதற்காக நீங்கள் 20 20 விதியை பின்பற்றலாம். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்கு பார்ப்பது கண்களில் ஏற்படும் அழுத்தத்தை ஓரளவு குறைக்க உதவும்.

கட்டுக்கதை: ஸ்கிரீன் நேரத்தை குறைத்து விட்டால் கிட்டப்பார்வை தீவிரமடிவதை தவிர்க்கலாம். 

உண்மை: ஸ்கிரீன் நேரத்தை நீங்கள் குறைக்கும் பொழுது கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கலாமே தவிர அது நேரடியாக கிட்டப்பார்வையின் முன்னேற்றத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இதற்காக நீங்கள் ஐ டிராப்ஸ், லென்ஸ் அல்லது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள கண்ணாடி போன்றவற்றை கண் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் பெயரில் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தினமும் அதிகாலை 3 மணிக்கு விழிப்பு வர காரணம் என்னவா இருக்கும்…???

கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் குறிப்புகள் 

*நீண்ட நேரத்திற்கு ஸ்கிரீன்களை பார்ப்பதை தவிர்த்து விட்டு இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். 

*சிறிய ஸ்கிரீன்களுக்கு பதிலாக பெரிய ஸ்கிரீனை கண்களில் இருந்து சற்று தூரமாக வைத்து பாருங்கள். 

*நீங்கள் ஸ்கிரீன்களை பயன்படுத்தும் பொழுது  அறையில் போதுமான அளவு வெளிச்சம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

*ஸ்கிரீன் பிரைட்னஸை அதிகமாக வைத்து விட வேண்டாம். 

*ஒருவேளை உங்களுக்கு கிட்டப்பார்வை இருந்தால் மருத்துவர் பரிந்துரைத்த கண்ணாடியை எப்பொழுதும் அணிய வேண்டும். 

*ஸ்கிரீனை பயன்படுத்தும் பொழுது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள். 

*கண்கள் வறண்டு போவதை கவனித்தால் மருத்துவரை ஆலோசித்து ஐ ட்ராப்ஸ் பயன்படுத்தவும். 

*வீட்டிற்கு வெளியே போதுமான அளவு நேரத்தை செலவு செய்து இயற்கை ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள். 

*கீரை, கேரட், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள், பாதாம், அவகாடோ, முட்டை மற்றும் மீன் போன்ற உணவுகள் நல்ல பார்வைத் திறனை அதிகரிக்கும். 

*வழக்கமான முறையில் கண் பயிற்சிகளை செய்வது கண்களில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

22 minutes ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

47 minutes ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

49 minutes ago

டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!

திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…

2 hours ago

500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்

வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…

2 hours ago

ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…

2 hours ago

This website uses cookies.