நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் என்பது உலகத்தில் உள்ள பெரும்பாலான பெண்களின் ஆசையாக தான் இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு காரணிகள் தலைமுடி சேதம் மற்றும் தலைமுடி உதிர்வதற்கு காரணமாக அமைகின்றன. அவற்றில் சுற்றுச்சூழல் காரணிகள், மரபணுக்கள், தரமற்ற உணவு, அளவுக்கு அதிகமாக ஹீட் ஸ்டைலிங் சாதனங்களை பயன்படுத்துதல் மற்றும் கடுமையான கெமிக்கல் சிகிச்சைகள் போன்றவை அடங்கும் இதன் விளைவாக நம்மில் பலருக்கு எளிதில் உடைந்து போகும் அல்லது மெலிதான கூந்தல் இருக்கிறது. நாம் எவ்வளவுதான் கடுமையான முயற்சிகளை செய்தாலும் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக தலைமுடி உதிர்வை சமாளிப்பது மற்றும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பது சம்பந்தமான பல தகவல்கள் நிலவி வருகிறது. இவற்றில் ஒரு சில உண்மையாக இருந்தாலும் பல கட்டுக் கதைகளாக தான் இருக்கின்றன. எனவே நம்முடைய தலைமுடி பராமரிப்பு வழக்கத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கு உண்மை எது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். அப்படி பார்க்கும் பொழுது இந்த பதிவில் பொதுவான சில தலைமுடி சம்பந்தப்பட்ட கட்டுக் கதைகளை தெரிந்து கொள்ளலாம்.
தலை முடியை அடிக்கடி வெட்டினால் தலை முடி வளரும்
தலைமுடியை அடிக்கடி வெட்டுவதால் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்காது. இது ஒரு பொதுவான கட்டுக்கதை. தலைமுடி வளர்ச்சி என்பது அதன் வேர்களில் இருந்து ஆரம்பிக்கும்மே தவிர முனைகளில் இருந்து அல்ல. எனவே உங்களுடைய தலைமுடியை நீங்கள் டிரிம் செய்வதால் அது தலைமுடியின் வளர்ச்சியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
வெந்நீரை பயன்படுத்தி தலைமுடியை நன்றாக சுத்தம் செய்யலாம்
பலர் தலைமுடியை அலசுவதற்கு வெந்நீரை பயன்படுத்தினால் அது நன்றாக சுத்தமாகும் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் தலைமுடிக்கு வெந்நீரை பயன்படுத்துவதால் அதில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு, தலைமுடி வறண்டு போவதற்கும், சிக்கு ஏற்படுவதற்கும் வழிவகுக்குறது. வெதுவெதுப்பான தண்ணீர் தலைமுடியை அலசுவதற்கு சுத்தம் செய்வதற்கு போதுமானது.
தலைமுடிக்கு எண்ணெய் வைத்தால் அதன் பளபளப்பு அதிகரிக்கும்
தினமும் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதால் அதன் பளபளப்பு அதிகரிக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் அளவுக்கு அதிகமாக எண்ணெய் வைப்பது தலைமுடியில் பிசுபிசுப்பு தன்மையை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமான எண்ணெய் துளைகளில் அடைப்புகளை ஏற்படுத்தி, தலைமுடி வளர்ச்சிக்கு பாதகமாக மாறுகிறது. எனவே வாரம் ஒரு முறை அல்லது இரு முறை தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது போதுமானது.
இதையும் படிக்கலாமே: கொத்தமல்லி சாதம்: இந்த மாதிரி டேஸ்ட்டா இதுவரை செய்திருக்கவே மாட்டீங்க!!!
அடிக்கடி ஷாம்பு
பயன்படுத்தினால் தலைமுடி உதிரும் தலைமுடிக்கு அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்தினால் தலைமுடி உதிரும் என்பது உண்மை கிடையாது. ஷாம்பூ பயன்படுத்துவது என்பது உங்கள் தலைமுடியில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றுவதற்கு உதவும். ஆனால் இது தலைமுடி உதிர்வுக்கு எந்த விதத்திலும் நேரடியாக காரணமாக அமையாது.
தலைமுடியில் ஹேர் பிரஷ் அதிகமாக பயன்படுத்தினால் அது வளரும்
ஒரு நாளைக்கு அதிகபட்ச முறை ஹேர் பிரஷ் பயன்படுத்துவது ஆரோக்கியமான தலைமுடிக்கு வழிவகுக்கும் என்பது ஒரு கட்டுக் கதை. தலை முடியில் பிரெஷ் பயன்படுத்துவது எண்ணெய்களை சமமாக்குவதற்கும், சிக்குகளை குறைப்பதற்கும் உதவும். ஆனால் அது தலைமுடியின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை கொண்டிருப்பதாக எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் கிடையாது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.