காலை விழிக்கும் போதே மினுமினுக்கும் சருமத்தை பெற நைட் நீங்க யூஸ் பண்ண வேண்டிய பொருள் இது தான்!!!

Author: Hemalatha Ramkumar
2 December 2024, 6:03 pm

இரவு நேர சரும பராமரிப்பு என்பது பகல் நேர சரும பராமரிப்பு போலவே நம்முடைய சருமத்தை மீட்டெடுப்பதற்கும், அதற்கு புத்துணர்ச்சி வழங்குவதற்கும் மிகவும் அவசியம். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, pH அளவை சமநிலையாக வைத்து, ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு நிச்சயமாக இயற்கையான சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுவது அவசியம். 

இயற்கையான பொருட்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அடங்கிய பொருட்களை  பயன்படுத்துவது சருமத்திற்கு அமைதியூட்டும் விளைவுகளை அளித்து சருமத்தின் சேதங்களை இயற்கையாக சரி செய்யும் செயல்முறையை தூண்டுகிறது. நீங்கள் சரியான இரவு பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றி வந்தால் காலை எழும்பொழுது புத்துணர்ச்சியான, மினுமினுப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். 

கடுமையான கெமிக்கல்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு இயற்கையான தீர்வுகளை பயன்படுத்துவது ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை பெற உதவும். அந்த வகையில் உங்களுடைய அன்றாட இரவு நேர சரும பராமரிப்பை மேம்படுத்த உதவும் சில இயற்கை பொருட்களை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஆழமான மாஸ்சரைசிங் விளைவை வழங்கி வறண்ட சருமத்திற்கு தேவையான போஷாக்கை கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆற்றி அதில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் காலை எழும்பொழுது உங்களுக்கு நீரேற்றமான மற்றும் மினுமினுப்பான சருமம் கிடைக்கும். 

வைட்டமின் E கேப்ஸ்யூல்

வைட்டமின் E கேப்ஸ்யூல் உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்புக்கு ஒரு அற்புதமான தீர்வாக அமைகிறது. வைட்டமின் E எண்ணெய் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து, மெல்லிய கோடுகளை குறைத்து வறண்ட சருமத்தை ஆற்றுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் சேதங்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்துகிறது. இதனால் வயதான அறிகுறிகள் நீங்கி நீங்கள் இளமையான சருமத்தை பெறுவீர்கள். 

இதையும் படிக்கலாமே: பம்ப் செய்யப்பட்ட தாய்ப்பாலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட சான்ஸ் இருக்கா…???

மஞ்சள் மற்றும் பால் 

சூரிய கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பதற்கு பால் மற்றும் மஞ்சள் கலவையை உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்பில் பயன்படுத்துங்கள். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. அதே நேரத்தில் மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் வீக்கத்தை குறைத்து, சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. இவை இரண்டும் இணைந்து சருமத்திற்கு அமைதியூட்டும் விளைவைக் கொடுத்து, அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இதனை ஒரு ஃபேஸ் மாஸ்காக முகத்தில் தடவி வந்தால் மினுமினுப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். 

ரோஸ் வாட்டர் 

ரோஸ் வாட்டர் என்பது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு அற்புதமான சரும பராமரிப்பு பொருள். ரோஸ் வாட்டர் சருமத்தில் மென்மையாக செயல்பட்டு வறண்டு போன சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கிறது மற்றும் சூரியனின் UV கதிர்களால் ஏற்படும் சேதத்தை ஆற்றி, முகப்பருக்களை போக்கி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனை நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உங்களுடைய சருமத்தில் ஒரு மிஸ்ட்டாக பயன்படுத்தலாம். 

கற்றாழை 

இந்த ஆற்றும் ஜெல் சருமத்திற்கு ஆழமான மாய்சரைசராக செயல்பட்டு, எரிச்சலைப் போக்கி, வீக்கத்தை குறைக்கிறது. வைட்டமின்கள் A, C மற்றும் E நிறைந்த கற்றாழை சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி வறண்ட சருமத்தை போக்குகிறது. அது மட்டுமல்லாமல் வயதான அறிகுறிகளான மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இதனை பயன்படுத்தி வர மென்மையான சருமத்தை பெறலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 73

    0

    0

    Leave a Reply