முகப்பரு வடுக்களை மூன்றே நாட்களில் மறைய செய்யும் ஹோம் ரெமடீஸ்!!!
Author: Hemalatha Ramkumar21 December 2024, 6:04 pm
முகப்பருக்களே ஒரு கொடுமையான விஷயமாக இருக்கும் பொழுது முகப்பருக்கள் விட்டுச் சென்ற வடுக்கள் நம்மை இன்னும் மோசமாக வருத்தமடையச் செய்யும். தொடர்ந்து மறைந்த முகப்பருக்களை நம்முடைய ஞாபகத்திலேயே வைத்துக் கொள்ள செய்கிறது இந்த வடுக்கள். ஆனால் இந்த விடாப்பிடியான முகப்பரு வடுக்களை மறைய செய்வதற்கு கடுமையான கெமிக்கல்கள் அல்லது விலையுயர்ந்த சிகிச்சைகள் தேவையில்லை. அதற்கு ஒரு சில இயற்கை தீர்வுகளே போதுமானது.
இந்த தீர்வுகளில் பல தாவர அடிப்படையில் செய்யப்படுபவையாக இருப்பதால் இதனால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. அந்த வகையில் முகப்பரு வடுக்களை குறைப்பதற்கு உதவும் சில இயற்கையான வழிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை
கற்றாழை சாற்றை நேரடியாக உங்களுடைய முகப்பரு வடுக்கள் மீது தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இதனை தினமும் செய்து வர கூடிய விரைவில் உங்களுடைய சருமத்தின் அமைப்பு மாறி, முகப்பரு வடுக்கள் மறைய ஆரம்பிக்கும்.
எலுமிச்சை சாறு
ஃபிரஷாக பிழிந்த எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். இதில் ஒரு சிறிய காட்டன் பந்தை முக்கி அதனை முகப்பரு வடுக்கள் மீது தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.
இதையும் படிச்சு பாருங்க: இந்த ஒரு நோயிலிருந்து தப்பிக்க தினமும் 5000 படிகள் நடைப்பயிற்சி போதுமானது!!!
தேன் மற்றும் இலவங்கப்பட்டை மாஸ்க்
இலவங்கப்பட்டையில் உள்ள நுண்ணுயிரி எதிர்ப்பு பண்புகள் மற்றும் தேனின் மாய்சரைசிங் பண்புகள் காரணமாக இந்த இரண்டும் கலந்த ஃபேஸ் மாஸ்க் முகப்பரு வடுக்களுக்கான இயற்கை சிகிச்சையாக அமைகிறது. இலவங்கப்பட்டை ஆற்றும் செயல் முறையை விரைவுப்படுத்துவதற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் தேன் அந்த இடத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
மஞ்சள்
மஞ்சளில் காணப்படும் என்ற பொருள் பிக்மென்டேஷனை போக்கி, செல் சுவர்கள் மீண்டும் உருவாவதை உறுதி செய்கிறது. கூடுதலாக இது சருமத்தை ஆற்றி கறைகள் மற்றும் தடிப்புகளை தடுக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.