இந்த வருட தீபாவளிய ஹெல்தியாக்க வேண்டாமா… வெள்ளை சர்க்கரைக்கு பதிலா  இதெல்லாம் டிரை பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
28 October 2024, 6:04 pm

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் ஒரு ஆரோக்கியமான மாற்றீடாக கருதப்பட்டாலும் ஆரோக்கியமான தீபாவளி பலகாரங்களை செய்வதற்கு இது உகந்ததல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே சுகாதார நிபுணர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை ஒரு சில சூழ்நிலைகளில் வெல்லம் ஆரோக்கியமான ஆப்ஷனாக கருதப்பட்டாலும் அதனை நாம் மிதமான அளவு சாப்பிடுவதே பரிந்துரைக்கப்படுகிறது. 

சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகிய இரண்டிற்கு இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள்:-

ஊட்டச்சத்து மதிப்பு:

வெல்லம் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டுமே முதன்மையாக சுக்குரோஸ் தான். எனினும் வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம், மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் சிறிதளவு காணப்படுகின்றன. 

வெல்லத்தின் கிளைசீமிக் எண்: 

வெல்லத்தின் கிளைசீமிக் எண்ணானது அது செயல்படுத்தப்படும் முறையை பொறுத்து மாறுபடலாம். இது வெள்ளை சர்க்கரையை விட சற்று குறைவாக இருக்கிறது. எனினும் வெல்லமும் கார்போஹைட்ரேட்டுகளின் ஒரு குறிப்பிடத்தக்க மூலமாகவே அமைகிறது. 

இதையும் படிக்கலாமே: வீட்ல எப்பவும் இருக்கும் இந்த பொருட்கள வைத்தே ஃபேஷியல் ஸ்க்ரப் ரெடி பண்ணிடலாம்!!!

இயற்கை vs சுத்திகரிக்கப்பட்டது வெல்லம் 

பெரும்பாலும் இயற்கை இனிப்பானாக கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளை சர்க்கரை சுத்திகரிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. எனினும் இரண்டுமே சுக்ரோசாக சுத்திகரிக்கப்பட்டவையே. 

வெல்லம் ஏன்  ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படக் கூடாது? 

கலோரி அளவு:

வெல்லம் மற்றும் வெள்ளை சர்க்கரை ஆகிய இரண்டுமே அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. எனவே இனிப்புகள் மூலமாக கிடைக்கும் கலோரிகளை குறைப்பதற்கு வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை ஒரு மாற்றீடாக நாம் கருதக்கூடாது. 

அளவு கட்டுப்பாடு:

நீங்கள் வெல்லத்தை பயன்படுத்தினாலும் சரி, சர்க்கரையை பயன்படுத்தினாலும் சரி அளவுக்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் வேறு சில உடல் நல குறைவுகளை ஏற்படுத்தலாம். 

தனிநபர் தேவைகள்: டயாபடீஸ் அல்லது பிற உடல்நல பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகிய இரண்டையும் அளவாக சாப்பிடுவது நல்லது. 

தீபாவளி பலகாரங்களை செய்ய ஆரோக்கியமான மாற்றீடுகள்:

இயற்கை இனிப்பான்கள்: பேரீச்சம் பழம், தேன் அல்லது மேப்பில் சிரப் போன்ற இயற்கை இனிப்பான்களை பயன்படுத்தலாம். ஆனால் இவற்றையும் அளவாகவே பயன்படுத்துங்கள். 

பழ சார்ந்த தின்பண்டங்கள்: ஃபிரஷான பழங்கள், ட்ரை ஃப்ரூட்ஸ் அல்லது பழ வகைகளை சார்ந்த இனிப்புகளை செய்யலாம். 

நட்ஸ் மற்றும் விதைகள்:

பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, வால்நட், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளை கூட சாப்பிட்டு மகிழலாம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 159

    0

    0