ஒரே மாதத்தில் தலைமுடியின் அடர்த்தியை அதிகரித்து காட்டும் இயற்கை வழிகள்!!!

Author: Hemalatha Ramkumar
29 November 2024, 10:48 am

அடர்த்தியான, ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்பது நம்மில் பலருக்கு இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆசை. அடர்த்தியான தலைமுடி ஒருவருடைய தன்னம்பிக்கையை மேம்படுத்தி, தோற்றத்தை மெருகேற்றி காட்டுகிறது. பலருக்கு இதனை அடைவது என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. எனினும் ஆரோக்கியமான தலைமுடியை பெறுவதற்கு விலை உயர்ந்த சிகிச்சைகள் அல்லது ப்ராடக்டுகளை மட்டுமே நம்பி இருப்பது தவறு. தொடர்ச்சியான மற்றும் போஷாக்கு நிறைந்த தலைமுடி பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றினாலே நிச்சயமாக நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். சரியான அணுகுமுறை மூலமாக ஒருவரால் நல்ல அடர்த்தியான, ஆரோக்கியமான தலைமுடியை பெற முடியும். அந்த வகையில் அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலை இயற்கையான வழியில் பெறுவதற்கான சில வழிகள் பற்றி இந்த பதிவில் பேசலாம். 

இயற்கை எண்ணெய்கள் பயன்படுத்தி தலைமுடியை மசாஜ் செய்யவும்

உங்களுடைய தலைமுடியை இயற்கை எண்ணெய்கள் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியில் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும். இவ்வாறு செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலை முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, உங்களுக்கு அடர்த்தியான தலைமுடியை பெற உதவும். வாரத்திற்கு 3 நாட்கள் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்கள் பயன்படுத்தி உங்களுடைய தலைமுடிக்கு மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் அடர்த்தியான தலைமுடியை பெறலாம். 

சரியான ஹேர் கட் தேர்வு செய்யவும் 

நீங்கள் சரியான ஹேர் கட் தேர்வு செய்தால் உடனடியாக உங்களுடைய தலைமுடி அடர்த்தியாக மாறிவிட்டது போன்ற தோற்றம் கிடைக்கும். தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் லேயர் கட்டிங் செய்து கொள்வதன் மூலமாக தலைமுடி அடர்த்தியானதாக மாறும். உங்களுடைய தலைமுடியை அடுக்கடுக்காக நீங்கள் வெட்டிக் கொள்ளும் பொழுது உங்களுடைய தலைமுடியின் அமைப்பு மற்றும் அடர்த்தியை நீங்கள் மேம்படுத்தலாம். 

இதையும் படிக்கலாமே: பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் பொள்ளாச்சி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம்!!!

சரிவிகித உணவு 

சரிவிகித உணவு என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் தலைமுடிக்கும் அவசியமானது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவை சாப்பிடுவது தடினமான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெறுவதற்கு உதவும். புரோட்டின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் A, C, E போன்றவை ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே உங்களுடைய உணவில் வஞ்சிரம் மீன், கீரை மற்றும் பாதாம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். 

வால்யூமனைசிங் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்

வால்யூமனைசிங் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவது அடர்த்தியான தலைமுடியை பெறுவதற்கு உதவும். இந்த ப்ராடக்டுகள் தலைமுடியை சுத்தம் செய்து அதற்கு தேவையான போஷாக்கு வழங்கி, அடர்த்தியான அமைப்பை தருவதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை வழக்கமான முறையில் பயன்படுத்தினால் நிச்சயமாக உங்களுடைய தலைமுடி அடர்த்தியாக மாறும்.

ஹீட் ஸ்டைலிங் சாதனங்களை குறைவாக பயன்படுத்துதல் 

பொதுவாக உங்களுடைய தலைமுடியை ஸ்ட்ரெய்டனிங் அல்லது கர்லிங் செய்வதற்கு நீங்கள் பயன்படுத்தும் ஹீட் ஸ்டைலிங் கருவிகள் தலைமுடியை அடர்த்தியானதாக காட்டுவதற்கு உதவினாலும் அந்த சாதனங்கள் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான வெப்பம் தலைமுடியை சேதப்படுத்தி, அது உடைந்து போகவும், மெலிந்து போகவும் வழிவகுக்கும். எனவே முடிந்தவரை பிளாக் அயன், கர்லிங் அயன் மற்றும் ப்ளோ டிரையர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அவருக்கு அம்மாவா நடிக்கும் போது கூட டபுள் மீனிங் பேசுனாரு.. கமல்ஹாசன் குறித்து பிரபல நடிகை வீடியோ!
  • Views: - 139

    0

    0