எந்நேரமும் சோம்பேறித்தனமாவே இருக்கா… அப்படின்னா உங்களுக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்க சான்ஸ் இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
23 September 2024, 2:17 pm

அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்களா? இரவு முழுவதும் நன்றாக தூங்கி எழுந்த பிறகும் கூட தூக்க கலக்கமாகவே இருக்கிறதா? சோர்வு என்பது பல காரணிகளால் ஏற்படலாம். அதில் முக்கியமான ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு. உங்களுடைய உடலானது சரியான வகையில் இயங்குவதற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சமநிலை அவசியம். ஒரு சில ஊட்டச்சத்துக்கள் குறையும் பொழுது அது உங்களை சோர்வாகவும், எந்த ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாதபடியும் செய்துவிடும். எனவே உங்களுடைய தொடர்ச்சியான சோர்வுக்கு காரணமாக உள்ள முக்கியமான ஐந்து குறைபாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

இரும்பு சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு இருக்க சான்ஸ் இருக்கு

இரும்பு சத்து என்பது நமது உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. உங்களுக்கு இரும்பு சத்து குறைபாடு இருந்தால் உங்களின் சிவப்பு ரத்த அணுக்களால் தசைகள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க முடியாது. இது உங்களை சோர்வாக உணர வைக்கும். இரும்புச்சத்து குறைபாடு பெண்களில் அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு இது ஏற்படுகிறது. ரத்த சோகை என்பது இரும்பு சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் ஒரு கோளாறு. 

மேலும் படிக்க: உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின் குறைபாடு…!!!

வைட்டமின் D குறைபாடு வைட்டமின் D என்பது ஆற்றல் சீரமைப்பு மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. இது போதுமான அளவு இல்லாவிட்டால் நாம் எப்பொழுதும் ஒருவித சோர்வாக உணர்வோம். சூரிய வெளிச்சம் என்பது வைட்டமின் D இன் முக்கியமான ஒரு மூலமாக அமைகிறது. பெரும்பாலான நேரத்தை வீட்டிற்குள் செலவிடுபவர்களுக்கு இந்த குறைபாடு ஏற்படும். குறைந்த அளவு வைட்டமின் D காரணமாக சோர்வு மற்றும் தசை வலுவிழந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். கொழுப்பு நிறைந்த மீன்கள், பால் மற்றும் சப்ளிமெண்ட்கள் மூலமாக வைட்டமின் D குறைபாட்டை ஒருவர் சமாளிக்கலாம். 

வைட்டமின் B12 குறைபாடு

சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக்கம் மற்றும் நரம்பு செயல்பாடு ஆகிய அனைத்திற்கும் வைட்டமின் B12 காரணமாகிறது. இந்த வைட்டமின் நமக்கு போதுமான அளவு கிடைக்காத போது மனநிலையில் மாற்றம், ஞாபகம் சக்தியில் சிக்கல்கள் மற்றும் மோசமான சோர்வு போன்றவை ஏற்படும். வைட்டமின் B12 விலங்கு மூலங்களிலிருந்து  கிடைப்பதால் இந்த குறைபாடு குறிப்பாக சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது. தானியங்கள், பால் சார்ந்த பொருட்கள், முட்டை போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமாக இந்த ஊட்டச்சத்து குறைபாடு தவிர்க்கலாம். 

மெக்னீசியம் குறைபாடு மெக்னீசியம் என்பது நமது உடலில் நூற்றுக்கணக்கான செயல்பாடுகளுக்கு காரணமாகிறது. அதில் ஆற்றல் உற்பத்தி மற்றும் தசை செயல்பாடு முக்கியமான ஒன்று. குறைந்த அளவு மெக்னீசியமானது ஒருவருக்கு சோர்வு, எரிச்சல் மற்றும் தசைவலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். மெக்னீசியம் தேவையான அளவு கிடைக்காத போது அது உங்களுடைய தூக்கத்தில் தலையிட்டு உங்களை எப்பொழுதும் சோர்வாக உணர வைக்கும். பாதாம் பருப்பு, அவகாடோ மற்றும் கீரை வகைகளில் அதிக அளவு மெக்னீசியம் சத்து உள்ளது. 

வைட்டமின் B9 

vegitables - Update news 360

வைட்டமின் B9 என்று அழைக்கப்படும் போலேட் சத்து DNA உற்பத்தி மற்றும் செல் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைகிறது. இது குறிப்பாக கர்பமாக இருக்கும் பெண்களுக்கு அவசியம். போலேட் குறைபாடு காரணமாக சோர்வு, கவனச்சிதறல் மற்றும் எரிச்சல் ஏற்படும். உங்களுடைய போலேட் அளவுகளை அதிகரிப்பதற்கு கீரை வகைகள், பீன்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி சோர்வு தட்டுகிறது என்றால் நிச்சயமாக இந்த குறைபாடுகள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களை உற்சாகமாக வைப்பதற்கு உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 244

    0

    0