வைட்டமின் D இன் முக்கிய ஆதாரமான சூரிய ஒளி நமக்கு ஏராளமாக கிடைத்தாலும், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த சூரிய ஒளி வைட்டமின் குறைபாடு உள்ளது. தரவுகளின்படி, உலகளவில் சுமார் 1 பில்லியன் மக்கள் இந்த வைட்டமின் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எலும்பு அடர்த்தி, தசை பலவீனம் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. வைட்டமின் D என்பது உங்கள் எலும்பு மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு பெற வேண்டிய ஊட்டச்சத்து ஆகும். சிக்கலை முன்கூட்டியே கண்டறிவது எலும்பு இழப்பு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவும். கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று உச்சந்தலையில் ஏற்படும் வியர்வை ஆகும்.
வைட்டமின் D குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள்:
வியர்வை மிகுந்த தலை அல்லது உச்சந்தலையில் வியர்வை ஏற்படுதல் என்பது வைட்டமின் D குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக வகைப்படுத்தப்படுகிறது. நம் அனைவருக்கும் வியர்வை என்பது பொதுவான ஒன்று தான். ஒரு சிலருக்கு குறைவாக வியர்க்கும், மற்றவர்களுக்கு ஓய்வில் இருக்கும்போது அல்லது எளிய பணிகளைச் செய்யும்போது கூட அதிகமாக வியர்க்கும். வியர்வையானது சங்கடமாக இருப்பது மட்டுமல்லாமல், அது ஒரு அடிப்படை சுகாதார நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது நரம்புத்தசை எரிச்சல் மற்றும் வியர்வை சுரப்பிகளின் அதிகப்படியான தூண்டுதலால் ஏற்படுகிறது. இது முக்கியமாக தலை மற்றும் கழுத்தில் தெரியும். சில சமயங்களில் வைட்டமின் D குறைபாடு முடி உதிர்வதற்கும் வழிவகுக்கும்.
தினமும் போதுமான வைட்டமின் D பெறுவது என்பது
கோடையில், எளிதானதாக இருந்தாலும் குளிர்கால மாதங்கள் அதாவது அக்டோபர் முதல் மார்ச் வரை, அடர்ந்த மூடுபனி காரணமாக, சூரிய ஒளியைப் பெறுவது கடினமானதாக இருக்கும். எனவே, குளிர் காலத்தில், போதுமான வைட்டமின் D பெற நீங்கள் சூரியனில் நீண்ட நேரம் இருக்க வேண்டும். கோடை மற்றும் வசந்த காலத்தில் 10 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் செலவழித்தால் போதுமானது. ஆனால் குளிர்காலத்தில் நீங்கள் குறைந்தது 2 மணிநேரம் செலவிட வேண்டும். அப்போது தான் வைட்டமின் D இன் பரிந்துரைக்கப்பட்ட அளவைப் பெறுவீர்கள்.
உணவில் இருந்து வைட்டமின் D பெறுவது எப்படி?
சூரிய ஒளி வைட்டமின் D இன் சிறந்த மூலமாகும். சருமம் சூரிய ஒளியில் படும் போது, நமது உடல் கொலஸ்ட்ராலை வைட்டமின் D ஆக மாற்றுகிறது. சூரியக் கதிர்களைத் தவிர, சில உணவுகளும் இந்த ஊட்டச்சத்தை உங்களுக்கு வழங்க முடியும். எண்ணெய் மீன், காட் கல்லீரல் எண்ணெய், சிவப்பு இறைச்சி, வலுவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் முட்டையின் மஞ்சள் கருக்கள், கீரை, முட்டைக்கோஸ், வெண்டைக்காய், சோயாபீன்ஸ். இந்த வைட்டமின் உட்கொள்வதை அதிகரிக்க உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு நீங்கள் வைட்டமின் D சப்ளிமெண்ட்ஸ்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.