எளிமையான வழியில் குழந்தைகளுக்கு கனிவாக நடந்துகொள்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்க பெற்றோர்களுக்கான டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar18 December 2024, 4:35 pm
ஒரு பெற்றோராக உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள், அடிப்படை ஒழுக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பது அவர்களை நல்ல மனிதராக வடிவமைப்பதற்கு மிகவும் உதவும். அவர்களுக்கு இந்த அடிப்படைகளை சொல்லிக் கொடுப்பது அதிலும் முக்கியமாக கனிவாக நடந்து கொள்ளுதல் மற்றும் நல்ல ஒழுக்கம் ஆகியவை இன்றைய காலகட்டத்தில் மிக மிக முக்கியமானதாக அமைகிறது.
ஏனெனில் இப்போது இருக்கக்கூடிய குழந்தைகள் பெரியவர்களை மதிப்பதில்லை, எந்த ஒரு விஷயத்தையும் கண்டு கொள்ளாமல், உறவுகளை பராமரிப்பதில் சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். மேலும் பிறரிடம் கனிவாக நடந்து கொள்ளும் குணம் குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே உங்களுடைய பிள்ளைகளுக்கு கனிவாக எப்படி நடந்து கொள்வது என்பதை கற்றுக் கொடுப்பது அவர்களிடத்தில் பச்சாதாபத்தை அதிகரிக்கும்.
அதாவது இதன் மூலமாக அவர்கள் பிறருக்கு உதவுவதற்கு முன் வருவார்கள், பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள், பிறருக்காக அக்கறை காட்டுவார்கள் மற்றும் வலுவான பந்தங்களை உருவாக்குவார்கள் இந்த நல்ல ஒழுக்கங்களை உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் அவர்கள் மிகவும் மரியாதைக்குரிய நபர்களாக, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு கனிவாக நடந்து கொள்ளுதல் மற்றும் நல்ல ஒழுக்கத்தை சொல்லிக் கொடுப்பதற்கு உதவும் சில அடிப்படையான வழிகளை பற்றி பார்க்கலாம்.
ரோல் மாடலாக இருப்பது

உங்களுடைய எந்த ஒரு நடத்தை அல்லது செயல்பாட்டை குழந்தைகள் உடனடியாக கற்றுக் கொள்வார்கள். பெரும்பாலான விஷயங்களை உங்களை கண்காணிப்பதன் மூலமாகவே அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே கனிவாக நடந்து கொள்வதை அவர்களுக்கு உணர்த்துவதற்கு நீங்கள் பிறருக்கு நன்றி சொல்வது, தேவையான நேரங்களில் மன்னிப்பு கேட்பது, பிறருக்காக கதவை திறந்து விடுவது அல்லது கனிவான வார்த்தைகளை பயன்படுத்துவது போன்றவற்றை செய்யலாம்.
பகிர்ந்து கொள்ளும் தன்மை
பகிர்ந்து கொள்ளுதல் என்பது எளிமையான அதே நேரத்தில் உங்களுடைய கனிவை பிறருக்கு காட்டுவதற்கான மிகவும் அற்புதமான வழி. உங்களிடம் இருக்கக்கூடிய விஷயங்களை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் போது அது மற்றவர்களிடத்தில் பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. அது பொம்மை, உணவு அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது உங்களுடைய பிள்ளைகளுக்கு பிறருடைய மதிப்புகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
உண்மையான உணர்வுகளைப் பற்றி பேசுதல்
உங்களுடைய தனிப்பட்ட மற்றும் ஆழ்ந்த உணர்வுகளை உங்கள் பிள்ளையிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருங்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களிடம் வந்து மனம் திறந்து பேசுவதற்கு ஏற்ற சூழலை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்வது உங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கை மற்றும் உணர்வு சார்ந்த புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும்.
இதையும் படிச்சு பாருங்க: டின்னர் முடிச்சுட்டு 15 நிமிடங்கள் இதை செய்தாலே ஈசியா வெயிட் லாஸ் பண்ணிடலாம்!!!
பாசிட்டிவான புத்தகங்களை வாசிப்பது
ஒரு குழந்தை இந்த உலகத்தை எவ்வாறு பார்க்கிறது என்பதை வடிவமைப்பதில் புத்தகங்கள் முக்கிய பங்கு கொண்டுள்ளன. உங்கள் குழந்தை சிறு பிள்ளையாக இருக்கும் பொழுதிலிருந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். அதனை நீங்கள் செய்துவிட்டால் அவர்கள் மிகவும் கனிவானவர்களாகவும், உண்மையானவர்களாகவும், யதார்த்தமானவர்களாகவும் வளருவார்கள். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பு அல்லது பேசுவதற்கு முன்பு பிறருடைய உணர்வை எப்படி புரிந்து கொள்வது என்பதை புத்தகங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.