இந்த பிரச்சனை இருக்கவங்க பாதாம் பருப்ப கண்டிப்பா அவாய்டு பண்ணீடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
22 October 2024, 4:48 pm

எல்லா வகையான நட்ஸுகளைப் போலவே பாதாம் பருப்பு சாப்பிடுவது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நமக்கு தெரியும். பாதாம் பருப்பில் நமது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனினும் ஒரு சில நபர்கள் பாதாம் பருப்புகளை சாப்பிடுவது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். யாரெல்லாம் பாதாம் பருப்புகளை தவிர்க்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம். 

சிறுநீரக கற்கள் உள்ள நோயாளிகள் பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது. ஏனெனில் பாதாம் பருப்பில் அதிக அளவு ஆக்ஸலேட் இருப்பதால் இது சிறுநீரக கற்கள் பிரச்சனையை இன்னும் மோசமாக்கும். 

உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும் பாதாம் பருப்புகளை சாப்பிடக்கூடாது.

பாதாம் பருப்புகளில் மாங்கனீசு சத்து இருப்பதன் காரணமாக அவற்றை அதிகமாக சாப்பிட்டால் நீங்கள் உயர் ரத்த அழுத்தத்திற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் வேலை செய்யாமல் போகலாம். 

செரிமான பிரச்சனைகள் இருப்பவர்களும் பாதாம் பருப்புகளை சாப்பிடக்கூடாது. பாதாம் பருப்பில் நார்ச்சத்து இருக்கும் காரணத்தினால் இதனை அதிகப்படியாக சாப்பிடுவது வாயு, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

மைக்ரேன் அதாவது ஒற்றைத் தலைவலி பிரச்சினை 

இருப்பவர்கள் பாதாம் பருப்புகளை சாப்பிட வேண்டாம். பாதாம் பருப்பில் வைட்டமின் E ஊட்டச்சத்து இருக்கும் காரணத்தால் பாதாமை அதிகமாக சாப்பிடுவது தலைவலி, மயக்கம் மற்றும் சோர்வை உருவாக்கும். 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக பாதாம் பருப்புகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பாதாம் பருப்புகளில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு இருக்கிறது.

எனவே பொதுவாக பேசப்படும் போது பாதாம் பருப்பு ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் குறிப்பிட்ட சில பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. ஆகையால் எச்சரிக்கையாக இருந்து ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ