ஆரோக்கியம்

இந்த செடிகளை வளர்த்து பாருங்க… இனி ஒரு கொசு கூட உங்க வீட்டுக்கு வராது!!!

பொதுவாக மழைக்காலம் என்றாலே நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு சீசனாக அமைகிறது. ஆனால் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிப்பதற்கு நாம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மழையை மகிழ்ச்சியோடு ரசித்து கொண்டாட முடியும். அந்த வகையில் மழைக்காலத்தில் அதிகம் பரவும் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பதற்கு நாம் முன்கூட்டியே ஒரு சில விஷயங்களை செய்து வைப்பது நல்லது. மழைக்காலங்களில் கொசுக்கள் அதிக அளவில் காணப்படும். அதிலும் மாலை நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்கவே முடியாது. 

கொசுக்கள் காரணமாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற மோசமான காய்ச்சல் ஏற்படலாம். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் ஆகும். கொசுக்களை விரட்டுவதற்கு கடைகளில் மஸ்கிட்டோ ரிப்பெல்லன்டுகள் விற்பனை செய்யப்பட்டாலும் அவற்றால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவதற்கு வீட்டில் நமது வீட்டில் குறிப்பிட்ட ஒரு சில தாவரங்களை வளர்ப்பது பயனுள்ளதாக அமையும். அந்த வகையில் கொசுக்களை விரட்டும் தாவரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

துளசி 

துளசி இலையில் வலிமையான வாசனை உள்ளது. மேலும் அவற்றில் உள்ள சிட்டோனெல்லா மற்றும் யூஜனால் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் கொசுக்களுக்கு எதிரியாக அமைகிறது. எனவே உங்களுடைய வாசல் அல்லது ஜன்னல்களின் அருகில் துளசி செடி வைப்பது பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை நீங்கள் மாடியில் இருந்தால் உங்களுடைய பால்கனியில் ஒரு தொட்டியில் துளசி செடியை வளர்க்கலாம். மேலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஒரு சில இலைகளை நன்றாக கசக்கி உங்களுடைய தோலின் மீது தடவிக் கொள்ளலாம். 

மேலும் படிக்க: கொசுக்கடியால் இரவு சரியா தூங்க முடியவில்லையா… மீட்புக்கு வரும் அத்தியாவசிய எண்ணெய்கள்!!!

புதினா 

சமையலுக்கு பயன்படுத்தப்படும் புதினா சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகிறது. புதினாவில் காணப்படும் நீபெட்டாலாக்டோன் இயற்கையான பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. சிறிய தொட்டிகள் அல்லது தொங்கும் பாஸ்கெட்கள் போன்றவற்றில் நீங்கள் புதினா செடியை வளர்க்கலாம். புதினா செடியை வளர்ப்பது மிகவும் எளிது. கடைகளில் இருந்து வாங்கும் புதினாவை இலைகளை பறித்து விட்டு அதன் தண்டை நட்டு வைத்தாலே போதும். 

சாமந்திப்பூ 

சாமந்திப்பூ சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகிறது. இதனை பராமரிப்பது மிகவும் எளிது. இதிலிருந்து வரக்கூடிய வலிமையான வாசனை கொசுக்களை வீட்டிற்குள் நுழைய விடாது. உங்களுடைய வீட்டை சுற்றி அல்லது நுழைவாயிலில் தொட்டியில் வைத்து சாமந்திப் பூக்களை நீங்கள் வளர்க்கலாம். இது கொசுக்களை மட்டுமல்லாமல் உங்கள் தோட்டத்தில் வரக்கூடிய பூச்சிகளையும் விரட்டும் தன்மை கொண்டது. 

ரோஸ்மேரி 

ரோஸ்மேரி என்ற அழகான  மூலிகைகளில் இருந்து வரக்கூடிய வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. ரோஸ்மேரி இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் சூடம் மற்றும் வார்னியாள் போன்ற கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது. 

லாவண்டர் 

அமைதி பண்புகள் நிறைந்த லாவெண்டர் கொசுக்களில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு சிறந்த ஆப்ஷன். லாவண்டரிலிருந்து வரும் வாசனை கொசுக்களுக்கு மிக மோசமானதாக கருதப்படுகிறது. எனவே ஜன்னல் பகுதி அல்லது நீங்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளில் தொட்டிகளில் லாவண்டர் செடியை நீங்கள் வளர்க்கலாம். 

இந்த செடிகள் கொசுக்களில் இருந்து உங்களுக்கு இயற்கையான பாதுகாப்பை அளித்தாலும் அவை முழுமையான பாதுகாப்பை உங்களுக்கு தராது. எனவே இந்த செடிகளுடன் சேர்த்து பிற கொசுக்களை விரட்டும் செயல்முறைகளில் ஈடுபடுவது நல்லது. உதாரணமாக உங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதை தவிர்க்கவும். மேலும் வீட்டில் கொசுவலை பயன்படுத்துவது நல்லது.  இந்த மாதிரியான சிறிய திட்டமிடல் மூலமாக உங்களுடைய மழைக்காலத்தை நீங்கள் மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

5 minutes ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

1 hour ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

2 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

14 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

15 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

16 hours ago

This website uses cookies.