கர்ப்பம் என்பது ஒரு பெண்ணுக்கு வார்த்தைகளில் விவரிக்க இயலாத மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வு. கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் போது, முதன்முதலாக தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எல்லா பெண்களுக்கும் அதிகமாகவே இருக்கும். இதற்கு கடைகளில் பிரக்னன்சி கிட் விற்பனை செய்யப்பட்டாலும், வீட்டிலேயே ஒரு சில பழங்கால பரிசோதனை முறைகள் மூலமாக கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.
பொதுவாக சிறுநீரை பயன்படுத்தி தான் எந்த ஒரு கர்ப்ப பரிசோதனையும் செய்யப்படும். ஆனால் தற்போது உலக அளவில் முதல் முறையாக உமிழ் நீரை பயன்படுத்தி கர்ப்பத்தை கண்டறியும் ஒரு தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலிஸ்ட்டிக் என்று சொல்லப்படும் சோதனை கருவி உமிழ் நீரை பயன்படுத்தி ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாளா இல்லையா என்பதை சொல்லிவிடுகிறது.
இந்த தயாரிப்பை ஜெருசலேமில் அமைந்துள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. சாலிக்னோஸ்டிக்ஸ் என்ற அந்த நிறுவனம் கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரிப்பதன் பின்னணியில் இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரக்னன்சியை உறுதி செய்ய உதவும் இந்த கிட்டில் ஒரு குச்சி போன்ற பொருள் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிய தெர்மாமீட்டரை எப்படி வாயில் வைப்போமோ, அதைப்போல இந்த குச்சியின் நுனியை வாயில் வைக்க வேண்டும். பின்னர் அந்த குச்சியானது உமிழ் நீரை சேகரிக்கும். சேகரித்த அந்த உமிழ் நீரை பிளாஸ்டிக் டியூபில் மாற்ற வேண்டும்.
இந்த பிளாஸ்டிக் டியூபில் ஒரு சில கெமிக்கல் ரியாக்ஷன்கள் ஏற்பட்டு உமிழ்நீரில் கர்ப்பகால ஹார்மோன் இருக்கிறதா என்பதை சோதிக்கும். இந்த சோதனைக்கு ‘ஸ்பிட் டெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிட் மூலமாக முடிவுகளை பெற ஒருவர் 5 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் ஆரம்ப அறிகுறிகள் முதல் மூன்று நிமிடங்களுக்குள் தென்படும்.
இஸ்ரேலில் இருக்கக்கூடிய கர்ப்பிணி பெண்கள் மற்றும் கர்ப்பிணி அல்லாத 300-க்கும் அதிகமான பெண்களிடம் இந்த கிட் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் சாலிக்னோஸ்டிக்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இந்த கிட் விற்பனைக்கு கிடைக்கிறது. வரக்கூடிய நாட்களில் இது பிற நாடுகளுக்கும் கிடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிட் மூலமாக மிகத் துல்லியமான முடிவுகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே கர்ப்பத்தை உறுதி செய்யக்கூடிய இந்த கிட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.