சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க இதை செய்தாலே போதும்!!!
Author: Hemalatha Ramkumar11 December 2022, 10:58 am
இன்றைய காலகட்டத்தில் ஏராளமான நபர்கள் சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். சரியான நேரத்தில் இதனை கண்டறிவதன் மூலம் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தாது என்றாலும், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம்.
சிறுநீரகக் கற்கள் என்பது கழிவுகளின் கொத்துக்கள் தான். சிறுநீரக கற்களை பெற்றவர்களுக்கே அதன் வலி புரியும். சரியான நோயறிதல் மற்றும் வலி நிவாரண மருந்துகளால் இதனை சமாளிக்க முடியும். சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கும் சமாளிப்பதற்கும் பல வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:-
1. கால்சியம் உட்கொள்ளலை அதிகரிக்கவும்: கால்சியம் சிறுநீரக கற்களுக்குப் பின்னால் உள்ள தீமை என்ற கருத்துக்கு மாறாக, போதுமான அளவு கால்சியம் உட்கொண்டால், கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
2. குறைந்த உப்பு உட்கொள்ளல் மற்றும் விலங்கு சார்ந்த புரதத்தைக் குறைத்தல்: உப்பு, நொறுக்கு தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் சோடியம் உட்கொள்ளலைக் குறைக்கவும். ஏனெனில் இது சிறுநீர் மூலம் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, விலங்கு சார்ந்த புரத உணவுகளில் இருக்கும் பியூரின்கள் யூரிக் அமில கற்களை உருவாக்குகின்றன. எனவே, உங்கள் விலங்கு புரத உணவை குறைத்துக் கொள்வது நல்லது.
3. மெக்னீசியம் உட்கொள்ளலை அதிகரிக்கவும்: மெக்னீசியம் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு ஒரு சிறந்த ஊக்கியாக உள்ளது. கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கல் உருவாவதைத் தடுப்பது முக்கியம். போதுமான அளவு (குறைந்தது 420mg/நாள்) மெக்னீசியத்தைப் பெற, வெண்ணெய், டோஃபு மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ளுங்கள். உங்கள் உடல் நன்கு பதிலளிப்பதை உறுதி செய்ய, ஆக்சலேட் நிறைந்த உணவுகளுடன் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மெக்னீசியத்தின் மேம்பட்ட இருப்பு குடலில் உள்ள ஆக்சலேட் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. இதனால் சிறுநீரக கற்களைத் தடுக்கிறது.
4. சிட்ரிக் அமில உட்கொள்ளலை அதிகரிக்கவும்: எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம், கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கும்.
5. போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்: நீரேற்றமாக இருப்பது எப்போதும் அவசியம். சிறுநீரில் கல்லை உருவாக்கும் பொருட்களின் அளவு போதுமான அளவு திரவத்தை பருகும் போது நீர்த்தப்படுகிறது. சிறுநீரகக் கற்களைத் தடுக்க, பழச்சாறுகள், பால், சூப் மற்றும் மூலிகை தேநீர் வடிவில் ஏராளமான தண்ணீர் அல்லது திரவங்களை பருகவும். சோடா, செயற்கை இனிப்பு அல்லது சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் கோலாக்களை தவிர்க்கவும்.
0
0