உங்களுக்கு முட்டை ரொம்ப பிடிக்கும்னா கூட ஒரு நாளைக்கு இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிடக்கூடாது… ஏன் தெரியுமா???
Author: Hemalatha Ramkumar12 December 2022, 7:37 pm
முட்டை பிரியர்களுக்காவே இந்த பதிவு. தினமும் இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது மரணம் மற்றும் இருதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு அமெரிக்க இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு மூலமாக 31 ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 30,000 பெரியவர்களின் உணவு முறைகள், உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கண்காணிக்கப்பட்டது.
முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் காரணமாக, அதனை அதிக அளவில் உட்கொள்ளும் போது, உடல்நலக் கேடுகளுடன் தொடர்புடையதாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு முட்டையில் கிட்டத்தட்ட 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.
ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் கொலஸ்ட்ராலை உட்கொள்வது இருதய நோய்க்கான 17 சதவீதம் அதிக ஆபத்து மற்றும் 18 சதவீதம் இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது.
எனவே, தினமும் இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.