புரோட்டீன் பவுடர் ஷேக் சாப்பிடுவது நல்லதா… கெட்டதா… தெளிவுபடுத்திவிடலாம்!!!
Author: Hemalatha Ramkumar11 November 2024, 6:17 pm
உடற்பகுதி ஆர்வலர்கள் இடையே புரோட்டீன் பவுடர் ஷேக்குகள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தங்களுடைய புரோட்டின் உட்கொள்ளலை அதிகரிப்பதற்காக இதனை பயன்படுத்துகின்றனர். புரோட்டீன் ஷேக்குகள் மிகவும் சௌகரியமான ஒரு ஆப்ஷனாக கருதப்படுகிறது. இந்த புரோட்டீன் பவுடர்கள் ஒருவருடைய உணவு சார்ந்த இலக்குகளை அடைவதற்கும், தசை மீட்புக்கும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக பிசியான வாழ்க்கை முறையை அனுபவித்து வரும் நபர்களுக்கு புரோட்டீன் பவுடர் ஏற்றதாக அமைகிறது. எனினும் இதனை அதிகப்படியாக சாப்பிட்டாலோ அல்லது உணவுக்கு பதிலாக சாப்பிட்டாலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றி நாம் மறந்து விடுகிறோம். இந்த பதிவில் அது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
புரோட்டீன் ஏன் அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது?
நம்முடைய தசைகளை சரி செய்ய நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஹார்மோன் சமநிலை ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியமான ஒரு பெரு ஊட்டச்சத்து. ஆக்டிவான வாழ்க்கை முறையை கொண்டவர்கள் அல்லது குறிப்பிட்ட ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட இலக்குகளை அடைய நினைப்பவர்களுக்கு அதிக புரோட்டீன் அளவுகள் தேவைப்படும். இதனை சரி செய்வதற்கு புரோட்டீன் பவுடர்கள் உதவுகின்றன. எனினும் உணவுகள் வழங்கும் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் இந்த பவுடர்களில் இருக்காது.
புரோட்டீன் பவுடர் ஷேக்குகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் சௌகரியம்
புரோட்டீன் பவுடர்களை மிக எளிதாக ஷேக்குகள் மற்றும் ஸ்மூத்திகளாக கலக்கி சாப்பிடலாம். இது நம்முடைய பிசியான வாழ்க்கையில் சௌகரியத்தை ஏற்படுத்துகிறது. புரோட்டீன் நிறைந்த உணவுகளை தயாரிப்பதில் சிக்கல்களை அனுபவிப்பவர்களுக்கு இது ஏற்றதாக அமையும்.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள்
நீங்கள் எடுத்துக் கொள்ளும் மூலத்தின் அடிப்படையில் அதாவது வே, சாய் அல்லது பீ புரோட்டீன் போன்றவற்றை பொறுத்து புரோட்டீன் பவுடர்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஆனால் அவற்றில் முழு உணவுகளில் உள்ள பிற வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து இருக்காது.
செரிமான பிரச்சனைகள்
ஒரு சில நபர்கள் புரோட்டீன் பவுடர்களை சாப்பிடுவதால் செரிமான அசௌகரியத்தை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு ஒருவர் தாவர அடிப்படையிலான புரோட்டீன்களை சாப்பிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: குழந்தைகள திட்டாம அடிக்காம நம்ம வழிக்கு கொண்டு வர உதவும் சூப்பர் டிப்ஸ்!!!
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது
இந்த பவுடர்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மிகவும் எளிது. ஆனால் இதனால் சிறுநீரக கோளாறுகள் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புரோட்டீன் சப்ளிமெண்ட்களை மிதமான அளவு சாப்பிடுவது மிகவும் அவசியம்.
சர்க்கரைகள் மற்றும் செயற்கை பொருட்கள்
பல்வேறு கமர்ஷியல் புரோட்டீன் பவுடர்களில் சர்க்கரை, இயற்கை இனிப்பான்கள் அல்லது பிரிசர்வேட்டிவ்கள் இருக்கலாம். இதனை அதிகப்படியாக சாப்பிடும்பொழுது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நீண்ட கால தாக்கம் ஏற்படும்.
புரோட்டீன் பவுடர் ஷேக்குகளுக்கு பதிலாக பயன்படுத்த வேண்டிய இயற்கை பொருட்கள்:-
கிரேக்க தயிர்
கிரேக்க தயிர் என்பது அதிக புரோட்டீன் நிறைந்த அதே நேரத்தில் ப்ரீபயாடிக் வழங்கும் ஒரு உணவாகும். இது குடல் ஆரோக்கியம் மற்றும் தசைகளை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது.
காட்டேஜ் சீஸ்
அதிக புரோட்டீன் நிறைந்த மற்றொரு ஆப்ஷனில் காட்டேஜ் சீஸ் உள்ளது. 1/2 கப் காட்டேஜ் சீஸில் 14 கிராம் புரோட்டீன் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது நம்முடைய எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான கால்சியம் சத்தையும் வழங்குகிறது.
பீன்ஸ் வகைகள்
பீன்ஸ் வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இது நமக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, செரிமானத்திற்கும் உதவுகிறது.
முட்டைகள்
முட்டைகள் ஒரு முழு புரதத்தின் மூலம். இதில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது.
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகள் தாவர புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலங்கள்.
மெலிந்த இறைச்சி மற்றும் மீன்
சிக்கன் மற்றும் வஞ்சிரம் போன்ற மீன் வகைகளில் அதிக புரோட்டீன் உள்ளது. உதாரணமாக, வஞ்சிரம் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
0
0