புரோட்டீன் அதிகம் இருக்க ஹெல்தி ஸ்நாக்ஸ் தேடுறவங்களுக்கு இது தான் சரியா இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
5 September 2024, 1:04 pm

நமது உடலை வலிமையாக்குவதற்கு நாம் பல்வேறு விதமான உணவுகளை சாப்பிடுகிறோம். அந்த வகையில் தசைகளுக்கு கூடுதல் வலிமையை தருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுகின்றனர். பலர் புரோட்டின் சப்ளிமென்ட்கள் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். எனினும் இயற்கையான முறையில் தசைகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக பாதாம் பருப்புகளை சாப்பிடலாம். இந்த சக்தி வாய்ந்த உலர்ந்த பழமானது உங்களுடைய தசைகளை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வலிமையாக்குகிறது.

பாதாம் பருப்பு நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மை அளிக்கும். அதனை சரியான வழியில் சாப்பிடும் பொழுது நமது தசைகள் வலுப்பெறும். 5 முதல் 10 பாதாம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அதனை பாலுடன் கலந்து சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கிறது. 35 கிராம் பாதாம் பருப்பில் 7 கிராம் புரோட்டீன் இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தனிநபரின் தினசரி தேவையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கருதப்படுகிறது.

புரதத்தை தவிர பாதாமில் ஆன்டிஆக்சிடென்ட்கள் உட்பட எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பாதாமில் நல்ல அளவு நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி12, மாங்கனீசு, மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கியுள்ளது. இதன் காரணமாக இது நமது உடலுக்கு ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகிறது. பாதாம் பருப்பில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நமது உடலில் உள்ள செல்களை ஆக்சிடேட் சேதத்தில் இருந்து பாதுகாத்து நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி புரிகிறது.

மேலும் பாதாம் பருப்பு வைட்டமின் ஈ ஊட்டச்சத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. வைட்டமின் ஈ இதய நோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு தவிர்க்க உதவும் ஒரு ஊட்டச்சத்து. பாதாம் சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு ஊக்கத்தை அளிக்கிறது.

ரத்தசர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதற்கும் பாதாம் உதவுகிறது. இதனால் இது டயாபடீஸ் நோயாளிகளுக்கு பலன் அளிக்கிறது. அதிக புரோட்டின் காரணமாக பாதாம் சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பிய உணர்வு கிடைப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற தின்பண்டமாக அமைகிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பாதாம் பருப்பு செயல்படுகிறது. நீங்கள் பாதாம் பருப்பை காலை அல்லது மதிய நேரத்தில் உணவுக்கு இடையில் தின்பண்டங்களுக்கு பதிலாக சாப்பிடலாம். எனினும் அதிகப்படியான பாதாம் பருப்பு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 214

    0

    0