இந்த 10 கேள்விகளுக்கான பதில்களை வைத்தே ஒரு நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்!!!
Author: Hemalatha Ramkumar27 December 2024, 2:19 pm
ஒரு நபர் எப்படிப்பட்டவர், அவர் என்ன மாதிரியான குணம் கொண்டவர் என்பதை புரிந்து கொள்வதில் சைக்காலஜி முக்கிய பங்கு கொண்டுள்ளது. பர்சனாலிட்டி என்பது ஒரு நபர் எப்படி யோசிப்பார், எப்படி உணர்வார் மற்றும் எப்படி நடந்து கொள்வார் என்பதை வடிவமைக்கிறது. இது அவருடைய முடிவு எடுக்கும் தன்மை, வாழ்க்கையை நோக்கி அவருடைய அணுகுமுறை மற்றும் உறவுகளை அவர் எப்படி கையாளுகிறார் என்பதை தூண்டுகிறது. அதிக கூச்ச சுபாவம் கொண்ட தன்மை, திறந்த மனதோடு இருக்கும் தன்மை, உணர்வுகளை சமநிலையாக கையாளுதல், வெளிநோக்கு திறன் போன்ற குணங்களை கண்டுபிடிக்கும் பொழுது ஒரு நபர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதை நம்மால் சிறந்த முறையில் புரிந்து கொள்ள இயலும்.
இந்த புரிதல் தகவல் தொடர்பை மேம்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலை சார்ந்த விஷயங்களிலும் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும். இந்த செயல்முறையில் உதவுவதற்கு ஒரு நபரின் பர்சனாலிட்டியை பற்றி ஆழமான கருத்துக்களை பெறுவதற்கு அவரிடம் நீங்கள் கேட்க வேண்டிய சில அர்த்தமுள்ள கேள்விகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு நபரின் குணத்தை தெரிந்து கொள்வதற்கு அவரிடம் நீங்கள் கேட்க வேண்டிய 10 முக்கியமான கேள்விகள்:-
*உங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே நீங்கள் எடுத்த ஒரு முடிவை மாற்றுவதற்கான வாய்ப்பை தற்போது பெற்றால் அந்த ஒரு முடிவு என்னவாக இருக்கும்?
*உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு பெரிய தவறை செய்து விட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த தவறுக்கு நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?

*மீண்டும் உங்களுடைய குழந்தை பருவத்திற்கு செல்ல ஆசைப்படுகிறீர்களா? உங்கள் குழந்தை பருவத்தில் கிடைத்த சிறந்த மற்றும் மோசமான நினைவுகள் என்னென்ன?
*மற்றவர்கள் அறியாத உங்களைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வேலை செய்து வருகிறீர்கள்?
*யாரிடமாவது கடினமாக நடந்து விட்டோமே என்று எதற்காகவாவது இப்போது வருத்தப்படுகிறீர்களா?
*யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா? நீங்கள் என்ன மாதிரியான நபரை காதலித்து வருகிறீர்கள்?
*நீங்கள் கனிவானவர் மற்றும் உன்னதமான ஒரு நபர் என்று நம்புகிறீர்களா?
இதையும் படிக்கலாமே: தாறுமாறாக கொட்டும் தலைமுடியை கட்டுப்படுத்தி, நீளமான கூந்தலை பெற உதவும் ஹோம்மேடு ஹேர் ஆயில் ரெசிபிகள்!!!
*எதிர் பாலினத்தை சேர்ந்த ஒருவர் நாம் நண்பர்களாக இருப்போம் என்று சொன்னால் நீங்கள் அதனை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? அது உங்களுக்கு சௌகரியமானதாக இருக்குமா?
*மதுபானம் உங்களுடைய வாழ்க்கையில் என்ன மாதிரியான பங்கை கொண்டுள்ளது?
*உங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பது என்ன என்பதை மூன்று வார்த்தைகளை கூற முடியுமா?
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.