லிஃப்ட்டுக்குள்ள கண்ணாடி வைக்கிறதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா…???

Author: Hemalatha Ramkumar
21 October 2024, 6:00 pm

லிஃப்டிற்குள் ஏன் கண்ணாடி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? லிஃப்டில் கண்ணாடி வைத்திருப்பது அழகு சார்ந்த காரணங்களுக்காக மட்டுமல்ல அதற்கு வேறு சில காரணங்களும் உள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கவும், பதட்டத்தை குறைக்கவும் போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு பின் அமைந்துள்ளது. இப்போது அந்த காரணங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

மனரீதியான காரணி எலிவேட்டர்களில் கண்ணாடிகள் வைக்கப்பட்டு இருப்பதற்கான முதல் காரணம் அதில் பயணிக்கும் நபர்களுக்கு சௌகரியமான ஒரு உணர்வை அளிப்பதற்காக தான். பெரும்பாலான நபர்கள் ஒரு சிறிய, அடைக்கப்பட்ட இடத்தில் பூட்டி வைத்திருக்கப்படும் போது பயம் அல்லது பதட்டம் அடைவார்கள். எனினும் ஒரு கண்ணாடி வேகமான இதயத்துடிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்ற பதட்டத்தின் அறிகுறிகளை தணிப்பதற்கு உதவுகிறது. ஒரு சிறிய இடத்தில் அடைப்பட்டு இருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படுவது வழக்கம்தான். இதனை போக்குவதற்காகவே லிஃப்ட்டுக்குள் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே: லிப் பாம் முதல் ஃபேஸ் மாஸ்க் வரை… இத்தனை வகையான அழகு சாதன பொருளாக செயல்படும் நெய்!!!

பாதுகாப்பு காரணி

பாதுகாப்பு என்பது மற்றும் ஒரு முக்கியமான விஷயம். நமக்குப் பின் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு கண்ணாடிகள் அனுமதிக்கின்றன. எனவே நம்மைச் சுற்றி எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்பதை ஒருவருக்கு உணர்த்துவதற்காகவும், தவறான செயல்பாடுகளை தவிர்ப்பதற்காகவும் திருட்டு அல்லது பாலியல் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக லிஃப்ட்டிற்குள் இருப்பவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். 

சௌகரியத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் எலிவேட்டர் அசோசியேஷன் ஆஃப் ஜப்பான் கண்ணாடிகளை எலிவேட்டர்கள் மற்றும் கட்டிடங்களில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை அமைத்துள்ளது. நமக்கு முன் ஒரு கண்ணாடி இருந்தால் உடனடியாக நாம் நம்முடைய தோற்றத்தை அதில் சரி பார்ப்போம். அதற்காக தான் இது லிஃப்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் நினைக்கலாம். ஆனால் அதையும் தாண்டி இது லிஃப்டிற்குள் உங்களுடைய சௌகரியத்தை ஏற்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வீல் சேரில் பயணிக்கும் உடலுக்கு முடியாதவர்கள் பிறருடைய உதவி இல்லாமல் எந்த ஒரு நபரையோ அல்லது சுவரையோ இடிக்காமல் தங்களுடைய வீல் சேரை லிஃப்டிற்குள் எளிதாக திருப்புவதற்கும் இந்த கண்ணாடி உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 147

    0

    0