உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களின் மிகவும் ஃபேவரடான ஒரு பானமாக காபி திகழ்கிறது. அதன் வலிமையான வாசனை, சுவை மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் தன்மை ஆகியவை காபி குடிப்பதற்கு நம்மை ஈர்க்கிறது. பலர் தங்களுடைய நாளை காபியுடன் தான் துவங்குகிறார்கள். ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காபி அறிவுத்திறன் செயல்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு ஆதரவு அளிக்கவும் உதவுகிறது. ஆனால் காபி குடிப்பதற்கு காலை வேலை சிறந்ததா என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்களுடைய உடல்நலத்திற்கு பல்வேறு விதமான கேடுகள் ஏற்படலாம். எனவே காலை முதல் வேலையாக காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதனை தவிர்க்க வேண்டிய நேரம் இது. அதற்கான சில காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதிக அசிடிட்டி
காபியை நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது அது உங்களுடைய செரிமான அமைப்பை தூண்டி அமில அளவுகளை அதிகரிக்கும். காபியில் உள்ள காஃபைன் கேஸ்ட்ரிக் அமிலம் உற்பத்தியை அதிகரித்து அதன் காரணமாக நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியம் உண்டாகிறது.
செரிமான செயல்முறையை தொந்தரவு செய்கிறது
காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது உங்களுடைய இயற்கையான செரிமான அமிலத்தை சீர்குலைக்கும். உணவு சாப்பிட்ட பிறகு சரியான முறையில் செயல்படும் உடலின் இயற்கையான அமில சமநிலை மற்றும் செரிமான நொதிகள் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் பிரச்சனைக்கு ஆளாகிறது.
பதட்டத்தை ஏற்படுத்துகிறது
வெறும் வயிற்றில் காபி பருகும் பொழுது அதில் உள்ள மன அழுத்த அளவுகளை அதிகரித்து உங்களுடைய மனநிலையை மோசமாக்கி கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது. ஒருவேளை காலை காபி குடித்தவுடன் புத்துணர்ச்சியாக உணர்வதற்கு பதிலாக நீங்கள் பதட்டம் அடைகிறீர்கள் என்றால் அதனை உங்களோடு காலை உணவோடு சேர்த்து சாப்பிடலாம் அல்லது குறைவான காஃபைன் உள்ள காபியை பருகலாம்.
ரத்த சர்க்கரை அளவுகளை பாதிக்கிறது
காபி உங்களுடைய இரத்த சர்க்கரை அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் குளுக்கோஸ் அளவுகள் திடீரென அதிகரித்து குறைகிறது. இதன் காரணமாக ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இது உங்களுடைய ஆற்றல் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி நாள் முழுவதும் உங்களுடைய மனநிலையை மோசமாக பாதிக்கிறது.
ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
காபியின் அசிடிட்டி மற்றும் காஃபைன் செரிமான செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தி உங்கள் காலை உணவில் இருக்கும் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறைகிறது. மேலும் உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.