தொப்புள் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீச காரணமும் அதற்கான தீர்வும்!!!

Author: Hemalatha Ramkumar
21 June 2023, 7:24 pm

நமது உடலில் பெரும்பாலும் கவனிக்கப்படாத பகுதி தொப்புளாகும். ஒரு சிலருக்கு தொப்புளில் ஏராளமான அழுக்குகள் குவிந்து, அது தேவையற்ற துர்நாற்றத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் தொப்புளில் வீக்கம் கூட காணப்படும். பெரும்பாலான நேரங்களில் இது பயப்படுவதற்கான விஷயம் அல்ல என்றாலும் ஒரு சில நேரங்களில் அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவில் தொப்புள் பகுதியில் அழுக்கு குவிய காரணம் என்ன மற்றும் தொப்புளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பார்க்கலாம்.

இறந்த சரும செல்கள், முடி மற்றும் துணியின் இழைகள் ஆகியவை ஒன்று சேர்ந்து தொப்புளில் அழுக்கை உருவாக்குகிறது. ஆழமான தொப்புள் பகுதி கொண்ட பெரும்பாலான நபர்களில் இது பொதுவானது.
இது தவிர தொப்புள் பகுதியில் அழுக்கு சேர வேறு சில காரணங்களும் உண்டு. தொப்புளின் வடிவமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏனெனில் தொப்புளின் வடிவமே அந்த பகுதியில் இருக்கக்கூடிய முடியின் அளவை முடிவு செய்கிறது. கூடுதலாக தொப்புள் பகுதியில் இருக்கக்கூடிய ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொப்புள் பகுதியில் அழுக்கு சேர்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அந்த பகுதியை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் அங்கு பாக்டீரியாக்கள் அதிக அளவில் வளர ஆரம்பித்து விடும். இது அரிப்பு, சிவத்தல், தொற்றுகள் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

தொப்புள் பகுதியை சுத்தம் செய்வது ஒரு எளிமையான செயல்முறை தான். காது சுத்தம் செய்யக்கூடிய பட்ஸ் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது காட்டன் துணி இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இதனை வெதுவெதுப்பான நீரில் நனைத்து தொப்புள் பகுதியினுள் லேசாக விட்டு பொறுமையாக அதனை சுத்தம் செய்யவும். விடாப்படியான அழுக்கு இருந்தால் அதில் மைல்டான சோப்பு அல்லது செலைன் சொல்யூஷன் பயன்படுத்தி நீக்கலாம். இதனை செய்த பிறகு அந்தப் பகுதியை உலரவிடுவது அவசியம். இது பாக்டீரியா வளர்ச்சியை தவிர்க்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?