ஹார்ட் அட்டாக் என்பது ஒரு நொடியில் நடந்து விடும் விஷயம் கிடையாது. கண்டிப்பாக நமது உடல் அதற்கான அறிகுறிகளை நமக்கு காட்டும். அதனை கண்டு கொள்ளாமல் நாம் விட்டு விடுவது தான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் முன்பு அல்லது சில வாரங்களுக்கு முன்போ உங்களுக்கு ஒரு சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட துவங்கும்.
அந்த அறிகுறிகள் என்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்வது மிகப்பெரிய ஆபத்திலிருந்து உங்கள் உயிரை காப்பாற்றும். பொதுவாக மாரடைப்பிற்கான அறிகுறிகள் என்பது நபருக்கு நபர் வேறுபடும். ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், மற்றவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக உள்ளது. மாரடைப்பை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், நமது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலமாக மாரடைப்பு வராமல் நம்மை கவனித்துக் கொள்ளலாம். அவை பின்வருமாறு:-
◆ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது,
தினமும் உடற்பயிற்சி செய்வது, மது மற்றும் புகை பிடித்தல் போன்றவற்றை தவிர்ப்பது.
◆பொறாமை, கோபம், குரோதம் ஆகிய தீய எண்ணங்கள் உங்கள் மனதை அண்டாமல், சுத்தமான எண்ணங்களோடு மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது.
◆நல்ல வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து சந்தோஷமாக இருப்பது..
◆வழக்கமான உடல் பரிசோதனைகளை செய்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது.
◆இன்டர்நெட்டில் பதிவிடப்படும் மருத்துவ முறைகள் அனைத்தையும் பின்பற்றி பார்க்கும் பழக்கம் இன்று பலருக்கு சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. இது தவறான காரியம் ஆகும். அங்கீகாரம் பெற்ற மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் சாப்பிடக்கூடாது. இந்த விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே நீண்ட ஆயுளோடு, நோயின்றி நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.