கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா… முதல்ல அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கோங்க!!!
Author: Hemalatha Ramkumar27 June 2023, 9:38 am
ஒரு சிலருக்கு கால்கள் அடிக்கடி மரத்துப்போவதுண்டு. இது பெரிய அசோகரித்தை ஏற்படுத்தும். இதன் போது கால்கள் இல்லாத ஒரு உணர்வு ஏற்படும். கால்கள் அடிக்கடி மரத்துப் போவது மற்றும் நீண்ட நேரம் அவ்வாறே இருப்பது போன்ற பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் இது பயப்படக்கூடிய விஷயம் இல்லை என்றாலும், ஒரு சில நேரங்களில் இது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே கால்கள் மரத்துப் போவதற்கான காரணங்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
முறுக்கிய நரம்புகள் கால்களை மரத்துப்போக செய்து ஏதோ ஊசி குத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது நமது முதுகில் இருக்கக்கூடிய நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹெர்னியேட்டட் டிஸ்க், ஸ்பைனல் ஸ்டீனோசிஸ் அல்லது பிற மருத்துவ நிலைகளால் ஏற்படலாம்.
கால்களுக்கான ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் பொழுது கால்களில் மரத்துப் போதல், கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற உணர்வும் ஏற்படும். இது பெரிபரல் ஆர்டரி நோய், ரத்தக்கட்டுகள் அல்லது வெரிகோஸ் நரம்பு போன்ற காரணங்களால் ஏற்படலாம்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காரவோ அல்லது நிற்கவோ செய்யும்பொழுது இது நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி கால்களை மரத்துப் போக செய்கிறது. பயணங்களின் போது குறிப்பாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் மற்றும் பணியிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதற்கான சூழ்நிலை அமையும் பொழுது இவ்வாறு நடைபெறலாம்.
உங்களுக்கு கால்களில் ஏதாவது காயம் இருந்தாலும் அது கால்களை மரத்துப் போகச் செய்து, அதனுடன் பிற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். எலும்பு முறிவு, சுளுக்கு அல்லது பிறவகையான டிராமா போன்றவை இதற்கு காரணமாக இருக்கும்.
நீரிழிவு நோய், மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் போன்ற மருத்துவ நிலைகளின் காரணமாகவும் கால்கள் அடிக்கடி மரத்து போகலாம். உங்கள் கால்கள் அடிக்கடி மரத்து போகிறது என்றால் கட்டாயமாக நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். அதற்கான காரணத்தை கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.