வொர்க்-அவுட் பண்ணிட்டு தப்பி தவறி கூட இந்த தப்ப செய்துடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
2 October 2024, 1:02 pm

உடற்பயிற்சி செய்வது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு மிக அவசியமாக கருதப்படுகிறது. ஆனால் உடற்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடிக்கும் பழக்கம் பொதுவானதாக பின்பற்றப்பட்டு வருகிறது. உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து தருவது அவசியம் தான் என்றாலும் அதனை உடற்பயிற்சிக்குப் பிறகு உடனடியாக செய்யக்கூடாது என்பதற்கு குறிப்பாக சில காரணங்கள் உள்ளன.  உடற்பயிற்சியை செய்த உடனேயே நீங்கள் தண்ணீர் குடிப்பது உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை சீர்குலைத்து, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. மேலும் இது செரிமான அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம். எனவே இந்த மாதிரியான பக்க விளைவுகளை தவிர்ப்பதற்கும், உங்களுடைய ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிப்பதற்கும் உடற்பயிற்சிக்கு பிறகு உடனடியாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள். இந்த பதிவில் அவ்வாறு ஏன் செய்யக்கூடாது என்பதற்கான முக்கியமான சில காரணங்களை பார்க்கலாம். 

செரிமான அசௌகரியம்

உடற்பயிற்சியை முடித்துவிட்டு உடனடியாக அதிக அளவு தண்ணீர் பருகும் பொழுது அது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. உங்களுடைய உடலானது தன்னை குளுமைப்படுத்துவதிலும், தசைகளை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தும் சமயத்தில் நீங்கள் அதிகப்படியான தண்ணீரை உங்கள் உடலுக்குள் புகுத்தும் பொழுது அது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்குகிறது. 

அளவுக்கு அதிகமான நீர்ச்சத்து 

அதிகப்படியான தண்ணீர் பருகுவது ஹைபோநேட்ரிமியா அல்லது வாட்டர் இன்டாக்ஸிகேசனை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சோடியம் அளவுகள் ஆபத்தான முறையில் குறைந்து செல்களின் செயல்பாட்டை பாதிக்கிறது.

மீட்பு செயல் முறையில் ஏற்படும் விளைவு 

உடற்பயிற்சிக்கு பின் உங்கள் உடலுக்கு உடனடி நீர்ச்சத்து அளித்தால் அது மீட்பு செயல்முறையை பாதிக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உங்கள் உடலுக்கு போதுமான அளவு நேரம் தேவை. ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் அதிகப்படியான தண்ணீர் பருகும் பொழுது அது அந்த செயல்முறையை பாதித்து, ஒட்டுமொத்த ஓய்வு மற்றும் தசை மீட்பு நடைபெறாமல் போகிறது. எனவே உங்களுடைய உடல் குளுமை பெறவும், மீட்புக்கும் போதுமான அளவு  நேரம் வழங்குவதும் அவசியம்.

எலக்ட்ரோலைட் சமநிலையின்மை உடற்பயிற்சியின் பொழுது ஒருவருக்கு அதிகப்படியான வியர்வை வெளியேறும் என்பது நமக்கு தெரியும். இதனால் எலக்ட்ரோலைட்டுகள் இழக்கப்படுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு நீங்கள் உடனடியாக அதிக தண்ணீர் குடித்தால் இந்த மினரல்கள் தண்ணீரில் கரைந்து அதனால் சோர்வு அல்லது தசை வலி ஏற்படலாம்.  

ரத்த சர்க்கரை அளவுகளில் தாக்கம் 

உடற்பயிற்சியை முடித்துவிட்டு உடனடியாக தண்ணீர் குடிப்பதால் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளில் மோசமான தாக்கம் ஏற்படலாம். வொர்க்-அவுட்டிற்கு பிறகு உங்களுடைய தசைகள் இன்சுலினுக்கு அதிக உணர்த்திறன் கொண்டதாக இருக்கும். மேலும் கிளைக்கோஜன் அளவுகளை மீட்டெடுப்பதற்காக உடல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் இந்த சமயத்தில் நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அது இந்த செயல்முறையை பாதித்து, ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உருவாக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Workout, exercise, drinking water after exercise, drinking water after workout, உடற்பயிற்சிக்கு பின் தண்ணீர் பருகுதல்,

  • thalapathy 69 is telugu movie remake தெலுங்கு பட ரீமேக்தான் தளபதி 69 கதை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலா..!!
  • Views: - 188

    0

    0