உலக மனநல தினம் 2024: IVF வெற்றி பெறுவதில்  மன அழுத்தத்தின் தாக்கம்!!!

Author: Hemalatha Ramkumar
10 October 2024, 11:09 am

அக்டோபர் 10, 2024 உலக மனநல தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனநலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்படுகிறது. மன ஆரோக்கியம், மன அழுத்தம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் அதிலும் குறிப்பாக இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷனுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து இந்த நாளில் நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். IVF வெற்றிகரமாக நடைபெறுமா என்ற அழுத்தம் ஒருவருடைய மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இது IVF வெற்றி விகிதங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

மன அழுத்தம் மற்றும் IVF எவ்வாறு ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டுள்ளது? 

IVF என்பது பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் பதட்டம் ஆகிய பல உணர்வுகள் கலந்த ஒரு பயணமாக அமைகிறது. கருத்தரிப்பதில் சவால்களை சந்திக்கும் பல தம்பதியினர் IVF செயல்முறையை நாடுகின்றனர். ஆனால் IVF என்பது ஒருவருடைய உடல் மற்றும் மனதை பாதிக்கும் ஒரு செயல்முறையாக அமைகிறது. IVF மூலமாக தங்களால் நிச்சயமாக கருத்தரிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி தம்பதியினரின் மன அழுத்தத்தை அதிகரித்து, அதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுகிறது. 

மன அழுத்தம் மற்றும் இனப்பெருக்கம் இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதை பல ஆய்வுகள் பரிந்துரை செய்கிறது. மன அழுத்தம் மற்றும் இனப்பெருக்கம் இடையே உள்ள உறவு சற்று சிக்கலானதாக இருந்தாலும் மன அழுத்தம் இனப்பெருக்க வெற்றியை உறுதி செய்வதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர். அதிக மன அழுத்தம் விந்தணுவின் தரத்தை பாதித்து, ஹார்மோன் அளவுகளை சீர்குலைத்து மற்றும் கருமுட்டை வெளிவரும் செயல்முறையில் தலையிடுகிறது. இவை அனைத்துமே வெற்றிகரமான கருத்தரித்தல் நடைபெறுவதற்கு அவசியம். 

IVF செயல்முறையின் போது ஏற்படும் அதிக அளவு மன அழுத்தம் கருப்பதிதல் செயல்முறையை வெற்றிகரமாக நடைபெறுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. அது மட்டுமல்லாமல் நாள்பட்ட மன அழுத்தம் கார்ட்டிசால் என்ற மன அழுத்த ஹார்மோன்களை அதிக அளவில் உற்பத்தி செய்து, இதனால் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது. ஆரோக்கியமான கர்ப்ப காலத்திற்கு ஹார்மோன் சமநிலை மிகவும் அவசியம். அதிக மன அழுத்தத்தோடு IVF செயல்முறையை துவங்கும் பெண்கள் சிகிச்சையின் போது அதிக சவால்களை அனுபவிக்கின்றனர். எனவே IVF செயல்முறை பற்றி பெறுவதற்கு உங்களுடைய மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.

மேலும் படிக்க: டெங்கு காய்ச்சலுக்கு இயற்கை மருந்து!!! 

மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிகப்படியாக யோசிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக ஒரு சிலர் ஆரோக்கியமற்ற பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். இதன் காரணமாக கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

IVF சமயத்தில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி? 

*எப்போதும் கூறுவதைப் போல ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள், தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலமாக உங்களுடைய நரம்பு அமைப்பை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கலாம். 

*உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர்களோடு வெளிப்படையாக பேசி மனதில் இருக்கும் கவலைகளை கொட்டி விடலாம். 

*நடை பயிற்சி, நீச்சல், ஆடல் அல்லது உங்களுக்கு பிடித்தமான எந்த ஒரு செயல்பாட்டை வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். 

*இயற்கையோடு நேரத்தை செலவழிப்பதும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். 

*ஒரு சிலர் மன அழுத்தத்தை குறைப்பதற்கு அக்குபஞ்சர் முறையை நாடுகின்றனர். தேவைப்பட்டால் அக்குபஞ்சர் நிபுணரை அணுகி உங்களுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கான யோசனைகளை நீங்கள் பெறலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 198

    0

    0