மருந்தாக அமையும் சுவையான தேனை இந்த நேரத்தில் சாப்பிட்டால் பலன் அதிகமாம்!!!
Author: Hemalatha Ramkumar29 May 2022, 10:11 am
தேன் பிடிக்காது என்று சொல்லும் ஒருவரை பார்ப்பது அறிது. சுவையாக இருப்பதோடு, தேன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அப்படியான
தேனை நாளின் எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள், தேனின் சிறந்த ஆரோக்கியப் பலன்களைப் பெறுவதற்கு, சரியான அளவில் தேனைச் சாப்பிடுவதுடன், குறிப்பிட்ட நேரங்களிலும் தேன் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
தேனின் நன்மைகள்:
●இயற்கை ஆற்றல் பூஸ்டர்
தேனில் உள்ள குளுக்கோஸ் உடலால் விரைவாக உறிஞ்சப்பட்டு, உடனடி ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. அதே நேரத்தில் பிரக்டோஸ் மெதுவாக உறிஞ்சப்படுவதால் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. மற்ற வகை சர்க்கரைகளுடன் ஒப்பிடுகையில் தேன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
●இருமலை குணப்படுத்துகிறது
2021ல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இரண்டு தேக்கரண்டி தேன் ஒரு தொடர்ச்சியான இருமலை குணப்படுத்த உதவும்.
●தூக்கத்தை மேம்படுத்துகிறது
விரைவில் தூங்குவதற்கு பாலில் தேன் கலந்து பயன்படுத்துங்கள். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். தேன் செரோடோனின் (உங்கள் மனநிலையை மேம்படுத்தும் ஒரு நரம்பியக்கடத்தி) என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. மேலும் நமது உடல் செரோடோனினை மெலடோனினாக மாற்றுகிறது (தூக்கத்தின் நீளம் மற்றும் தரத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு இரசாயன கலவை).
●காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறது
தேன் பெரும்பாலும் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகியவற்றால் ஆனது. இதனை காயங்களில் தடவினால் தண்ணீரை உறிஞ்சும். இது குணப்படுத்துவதை ஊக்குவிக்க உதவுகிறது. இது காயங்கள், தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்களுக்கு இயற்கையான முதலுதவி சிகிச்சையாக அமைகிறது. தேனின் ஆண்டிசெப்டிக் பண்புகள் சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் வெளிப்புற காயங்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது வீக்கம், வலி மற்றும் வடுவைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.
●நோய் எதிர்ப்பு சக்திக்கு தேன்
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் செரிமான அமைப்பை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தியாகவும் உள்ளது. இது உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். பலன்களைப் பெற காலை உணவுக்கு முன் இந்த சுத்தப்படுத்தும் டானிக்கைக் குடியுங்கள்.
●இதய நோய்கள் வராமல் தடுக்கிறது
இயற்கையான தேனின் நுகர்வு இரத்தத்தில் உள்ள பாலிஃபோனிக் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவும்.
●எடை இழப்புக்கு தேன்
படுக்கைக்கு முன் தேனை உட்கொள்ளும் போது, அதிகாலை நேரத்தில் உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது.
குறிப்பு: தேன் உட்கொள்வது சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பாதுகாப்பானது. ஆனால் குழந்தைகளுக்கு தேன் கொடுக்க, குறைந்தது ஒரு வயது வரை காத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
0
0