இந்தியாவில், தயிரானது உணவு உண்ட பின்போ அல்லது உணவுடனோ சேர்த்து உண்ணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உணவு செரிமானத்தை அதிகரிக்கிறது. தயிர்சாதம், தயிற்பச்சடி போன்ற இந்த பால் சார்ந்த பொருளை உணவில் எடுத்துக்கொள்ள சில வழிகள் உள்ளன. ஆனால் இவை தயிர் உண்பதற்கான ஆரோக்கியமான வழிகள் தானா? தயிரை சரியான முறையில் உண்ணக்கூடிய சில வழிகளை பற்றி காண்போம்.
இரவு நேரங்களில் தயிர் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கபத்தை அதிகப்படுத்துகிறது. கபம் அதிகமாகும் போது சளி தொல்லை ஏற்படுகிறது மற்றும் அஜீரண கோளாறு ஏற்படுகிறது.
தயிரை சூடாக்கி உண்பதை தவிர்க்க வேண்டும். தயிரை சூடாக்குவதால் அதன் இயற்கையான குணங்களில் மாற்றம் ஏற்படுகிறது. இது உங்களுக்கு மூச்சு திணறல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தினமும் உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது உடல் வீக்கத்தை ஏற்படுத்தி உடலில் கபம் மற்றும் பித்தம் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. எனவே தொடர்ந்து தினமும் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எனவே தயிருக்கு பதிலாக மோர் போன்றவற்றை பருகலாம்.
தயிருடன் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம். சிலருக்கு இது ஒவ்வாமை மற்றும் உடலில் வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று உணவு நிபுணர்கள் கூறுகன்றனர்.
மீன் அல்லது இறைச்சி போன்ற உணவு பொருள்களுடன் தயிர் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கோழி அல்லது மீன் போன்ற அசைவ உணவுகளுடன் தயிர் சேர்த்து உண்ணும்போது அது நமது உடலில் நச்சுக்கள் உருவாக வழி வகுக்கிறது. இந்த நச்சுக்கள் நமது உடலில் அரிப்பு, சொரியாசிஸ் போன்ற தோல் நோய்கள் உருவாக காரணமாகின்றன.
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி உண்பதை தவிர்க்கவும். ஏனெனில் வெள்ளரிக்காய் மற்றும் தயிர் இவை இரண்டும் எதிரெதிர் பண்புகள் கொண்டவை. இவை காய்ச்சல் மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது. வெள்ளரிக்காய் தயிர் பச்சடிக்கு பதிலாக சுரைக்காய் தயிர் பச்சடி பயன்படுத்தலாம்.
நீங்கள் தயிர் சாப்பிட விரும்பினால் மதிய நேரத்தில் உண்ணுங்கள் ஏனெனில் இதுவே தயிர் சாப்பிட சரியான நேரம் ஆகும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.