குளிர்காலத்துல வெயிட் லாஸுக்கு கிடைக்கும் இந்த பழங்களை மிஸ் பண்ணிடாதீங்க!!! 

Author: Hemalatha Ramkumar
23 November 2024, 11:09 am

உடல் எடையை குறைப்பது பற்றி பேசும்பொழுது பலர் கோடை காலமே அதற்கான சரியான நேரம் என்று கருதுகின்றனர். ஃபிரெஷான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்பது பொதுவான கருத்து. ஆனால் குளிர் காலத்திலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவும் பருவ கால பழங்கள் கிடைக்கின்றது. அவை ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நமக்கு புத்துணர்ச்சி அளித்து, உடல் எடையை குறைப்பதற்கான நம்முடைய முயற்சிக்கும் உதவுகிறது. அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பழங்கள் பசியை குறைத்து, வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து, செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அவற்றில் உள்ள அதிகப்படியான நீர்சத்து காரணமாக இவை உடல் எடையை குறைத்து, வயிற்று உப்புசத்தை தடுக்கிறது. 

இந்த பழங்கள் நம்முடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு சிறந்த முறையில் உதவுகின்றன. இவற்றை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது ஸ்மூத்தியாகவோ அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம். அந்த வகையில் குளிர் காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கு உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய சில பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

கிரேப் ஃபுரூட் 

பார்ப்பதற்கு ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த கிரேப் ஃபுரூட் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு உதவும் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாக இருக்கிறது. ஏனெனில் பாதி அளவு கிரேப் ஃபுரூட்டில் 50 கலோரிகள் மட்டுமே உள்ளது. இந்த சிட்ரஸ் பழத்தில் அதிக அளவு வைட்டமின் C இருப்பதால் இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு வலு சேர்த்து குளிர்காலத்தில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. 

மாதுளம் பழம் 

மாதுளம் பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிலும் குறிப்பாக பாலிபினால்கள் அதிகமாக உள்ளது. இவை நமது உடலில் வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. கூடுதலாக இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொழுப்பு எரிக்கப்படும் செயல்முறையை தூண்டி அடிவயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. 

இதையும் படிக்கலாமே: 10 நிமிடங்களில் ரெடியாகும் மொறு மொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா!!!

ஆப்பிள் 

ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C நிறைந்த ஆப்பிள் பழங்கள் நம்முடைய பொதுவான ஆரோக்கியம் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருளாக இருக்கிறது. குறைந்த கிளைசிமிக் எண் கொண்ட ஆப்பிள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. 

சிட்ரஸ் பழங்கள் 

பொதுவாக குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த முறையில் உதவுகின்றன. இவற்றில் அதிக அளவில் உள்ள வைட்டமின் C நமது உடலில் கொழுப்பை எரிக்கும் செயல் முறையை மேம்படுத்தும் கார்னிடைன் என்ற காம்பவுண்ட்  உற்பத்தி செய்ய உதவுகிறது. 

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 121

    0

    0