குளிர் காலத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமா…???

Author: Hemalatha Ramkumar
30 December 2024, 7:20 pm

குளிர்காலம் வந்து விட்டாலே நம்முடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் குளிர் காலத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் எப்பொழுதுமே பலருக்கு இருந்து கொண்டு இருக்கிறது. கோடை காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அதே சமயத்தில் குளிர்காலத்திலும் சூரியனிலிருந்து வெளிப்படும் UV கதிர்கள் நம்முடைய சருமத்தில் சேதம், வறட்சி மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை ஏற்படுத்தலாம். ஆகவே குளிர்கால சரும பராமரிப்பு வழக்கத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் எதற்காக சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்? 

சன் ஸ்கிரீன் என்பது கோடை காலத்திற்கான ஒரு அத்தியாவசியம் மட்டும் கிடையாது. மாறாக, வருடம் முழுவதுமே உங்கள் சருமத்தை சன்பெர்ன் மற்றும் தீங்கு விளைவிக்கும் UVA மற்றும் UVB கதிர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு மிகவும் தேவை. சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும் சரி வானம் மேகமூட்டமாக இருந்தாலும் சரி, சன் ஸ்கிரீன் உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு அத்தியாவசிய பகுதியாக கட்டாயம் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கும் கூட சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். குழந்தைகள் வெளியே விளையாடும் பொழுது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், நீண்ட கால சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இது உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: கருத்தரித்தலை பாதிக்கும் உடற்பருமன் …. கவனிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் பெரிது!!!

குளிர்கால மாதங்களில் பொதுவாக சூரியனின் தாக்கம் அதிக அளவில் இருக்காது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த சமயத்தில் தீங்கு விளைவிக்கும் UVA கதிர்கள் பிரேக் எடுப்பது கிடையாது. இருப்பினும், அவற்றின் தீவிரத்தை குறைக்கலாம். ஆனால் சருமத்தில் ஆழமாக ஊடுருவி, வயதான அறிகுறிகளை ஏற்படுத்தும் UVA கதிர்கள் வருடம் முழுவதிலும் ஆக்டிவாக இருக்கும். எனவே மேகமூட்டம் எந்த ஒரு சூழ்நிலையிலும் UV கதிர்களை தடுக்காது. 80% சதவீத UV கதிர்கள் மேகங்களுக்குள் நுழைந்து வெளிவருவதற்கான திறன்களை கொண்டுள்ளன. ஆகவே இது குளிர் காலம் தானே சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை, செலவை மிச்சப்படுத்தலாம் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Darsha Gupta Instagram video கடல் கன்னியாக வலம் வந்த பிக் பாஸ் பிரபலம்..இணையத்தில் வைரல் ஆகும் பீச் வீடியோ..!
  • Views: - 75

    0

    0

    Leave a Reply