ஆரோக்கியமான பொருள் தானேனு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா கூட பிரச்சினை தான்… மஞ்சள் கிட்ட கேர்ஃபுல்லா இருங்க!!!

Author: Hemalatha Ramkumar
21 செப்டம்பர் 2024, 3:39 மணி
Quick Share

மஞ்சள் பொடியில் நமது உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு பலன்கள் அடங்கி இருப்பது இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். வீக்க எதிர்ப்பு பண்புகள் முதல் ஆன்டி-ஆக்சிடன்ட் வரை நமது உடலுக்கு தேவையான அத்தனை நன்மைகளும் மஞ்சள் பொடியில் அடங்கி உள்ளது. ஆனால் உண்மையில் மஞ்சள் பொடி பாதுகாப்பானதா? மஞ்சள் பொடியை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அது பாதுகாப்பானது. அளவுக்கு அதிகமாக மஞ்சள் பொடியை பயன்படுத்தும் பொழுது அதனால் நமக்கு கல்லீரல் நோய், இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பல்வேறு விதமான உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதிக அளவு மஞ்சள் பொடியை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க: பப்பாளி விதைகள்: பெண்களுக்கான ஊட்டச்சத்து களஞ்சியம்!!!

வயிறு அல்லது செரிமான பிரச்சனைகள் 

அளவுக்கு அதிகமாக மஞ்சள் பொடியை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பல்வேறு பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாயு தொல்லை, ஆசிட் ரிப்லெக்ஸ் போன்ற செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இதனால் ஏற்படலாம்.

சருமத்தில் தடிப்புகள்

ஆரோக்கியமான தலைமுடி மற்றும் சருமத்திற்கு நமது முகம் மற்றும் மயிர்கால்களில் மஞ்சள் பொடி தடவுவது வழக்கம். ஆனால் அவற்றை அதிகமாக பயன்படுத்தும் பொழுது அதனால் சருமத்தில் தடுப்புகள் ஏற்படலாம். மஞ்சள் அல்லது குர்குமின் அடங்கியுள்ள ப்ராடக்டுகள் சில நேரங்களில் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக தோல் நிபுணரை அணுக வேண்டும். 

அதிக ரத்தகசிவு 

மஞ்சளில் ரத்த மெலிதல் பண்புகள் இருப்பதால் இது ரத்த உறைதலுக்கு அவசியமான மற்றும் ரத்த ஓட்டத்தை சீரமைக்கும் கால்சியம் சத்தை நேரடியாக தடை செய்கிறது. இதன் காரணமாக ரத்தகசிவு அதிகரிக்கிறது. மூக்கு அல்லது ஈறுகளில் இரத்தக் கசிவு, மலம் மற்றும் சிறுநீரில் ரத்தம் போன்றவை அதிக அளவு மஞ்சள் பொடி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவு.

குறைந்த ரத்த சர்க்கரை அளவு 

வகை 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தங்களுடைய உடலில் உள்ள அதிக ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவதற்கு மஞ்சள் உதவுகிறது. எனினும் இதனை அதிக அளவு எடுக்கும் பொழுது அதனால் ரத்த சர்க்கரை அளவுகள் குறையலாம். இது இயல்பான ரத்த சர்க்கரை அளவுகள் உள்ள நபர்களில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. 

கல்லீரல் சேதம் 

அதிக அளவில் குர்குமின் கல்லீரலுக்கு மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தும். மஞ்சள் காமாலை, அடிவயிற்றில் வலி, குமட்டல் மற்றும் கருமை நிற சிறுநீர் போன்றவை சேதமடைந்த கல்லீரலின் சில அறிகுறிகள். இதற்கு நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆகவே ஒருவர் எவ்வளவு மஞ்சள் எடுப்பது பாதுகாப்பானது? 

ஆய்வுகளின் அடிப்படையில்,ஒரு நாளைக்கு 3 கிராம் அளவு மஞ்சள் பொடி எடுப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் 8 கிராம் வரை குர்குமின் உள்ள ப்ராடக்டுகளை 2 மாதங்கள் பயன்படுத்துவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 131

    0

    0

    மறுமொழி இடவும்