சாப்பாட்டுல காரம் தூக்கலா இருந்தா தான்  பிடிக்குமா… உங்களுக்கு கண்டிப்பா பிரச்சினை காத்திருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
24 September 2024, 5:06 pm

ஒரு சிலருக்கு காரசாரமாக சாப்பிட்டால் மட்டுமே சாப்பிட்டா மாதிரியே இருக்கும். அதிக பச்சை மிளகாய் அல்லது மிளகு சேர்த்து சாப்பிடுவது உண்மையில் எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாது. காரசாரமான உணவை அடிக்கடி சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள், தலைவலி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கலாம். ஆனால் இது எந்த அளவுக்கு வெப்பத்தை உங்களுடைய உடல் தாங்கிக் கொள்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. எனவே அதிக காரசாரமான உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை முதலில் பார்க்கலாம். 

காரசாரமான உணவுகளை அதிக அளவில் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடும் பொழுது அதனால் நெஞ்செரிச்சல் அல்லது பிற வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகலாம். இதற்கு பின்னணியில் உள்ள சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக இன்னும் ஆய்வு தேவைப்படுகிறது. மேலும் காரசாரமான உணவு குமட்டல், அடி வயிற்றில் வலி போன்றவற்றை உருவாக்கலாம். 

காரசாரமான உணவுகள் கேஸ்ட்ரிடிஸ் அல்லது அல்சர்களை நேரடியாக ஏற்படுத்தாது என்பதை ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால் ஏற்கனவே உங்களுக்கு இது மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் அது நிச்சயமாக காரசாரமான உணவு சாப்பிடும் பொழுது இன்னும் தூண்டப்படும். எனவே இது போன்ற மருத்துவ நிலையினால் அவதிப்பட்டு வருபவர்கள் காரசாரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

காரசாரமான உணவுகள் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். ஆம், மசாலா பொருட்கள் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். எனினும் காரசாரமான உணவுகள் அதிலும் இறைச்சி சார்ந்த உணவுகளை நீங்கள் அதிக அளவு சாப்பிடும் பொழுது அது உங்கள் உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது.

மேலும் நீங்கள் காரசாரமான உணவு சாப்பிட்ட பிறகு உங்களுக்கு ஏதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் என்று தோன்றலாம். அவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது அதன் காரணமாகவும் உங்கள் உடல் எடை அதிகரிக்கலாம்.  

அதிக காரமான உணவை நீங்க சாப்பிட்ட உடனேயே அது உங்களுடைய உணவுக் குழாயின் வழியே செல்லும் போது செரிமானத்தின் விகிதத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதுவும் இந்த வயிற்றுப்போக்கு வலியுடன் கூடிய ஒன்றாக இருக்கும். 

மேலும் படிக்க: நீண்ட நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப் யூஸ் பண்றீங்களா… உங்கள் கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்!!!

காரசாரமான உணவு சாப்பிடுவதால் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வகையான தலைவலி அதிக வலி மிகுந்ததாகவும், திடீரென்று ஏற்படக்கூடியதாகவும் இருக்கும். காரசாரமான உணவுகளை அதிகம் சாப்பிடுதல் சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் பங்கேற்ற நபரின் மூளை வழக்கமான மூளையை விட குறுகியதாக இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக தலைவலி ஏற்படும். ஏனெனில் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக இந்த தலைவலி உருவாகிறது.

உங்களுக்கு காரசாரமான உணவுகள் பிடிக்கும் என்றால் அதனை அவ்வப்போது ஆசைக்கு சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. அதையே தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் பொழுது அதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் மிக மோசமான வகையில் பாதிப்படையும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!