நாள் முழுவதும் ACலயே இருப்பீங்களா… அப்படின்னா நீங்க இத செய்யாவிட்டா பெரிய ஆபத்துல மாட்டிக்க சான்ஸ் இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
16 October 2024, 4:40 pm

இன்று ஏர் கண்டிஷனர் என்பது ஒரு அத்தியாவசியம் போல மாறிவிட்டது. அந்த அளவுக்கு கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு ஏசி நமக்கு உதவுகிறது. ஆனால் தினமும் நாள் முழுவதும் ஏசி ரூமில் இருந்தால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு என்ன ஆகும் என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். 

ஏர் கண்டிஷனர் என்பது ஒரு அறையில் உள்ள வெப்பநிலையை சீராக்கி காற்றின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக வெப்ப சம்மந்தப்பட்ட பிரச்சனைகளான ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் டீஹட்ரேஷன் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. அதிலும் தற்போது விற்பனை செய்யப்படும் மாடர்ன் ஏசி சிஸ்டம்களில் பில்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தூசு மற்றும் காற்று மூலமாக பரவும் நச்சுகளை வடிகட்டி அறைக்குள் சுத்தமான காற்று இருப்பதை உறுதி செய்து அதன் மூலமாக சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கிறது. இதனால் அலர்ஜி அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு ஏசி சிறந்த முறையில் உதவுகிறது. 

ஆனால் ஒரு சில நிறுவனங்களில் ஏசி எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதில் பணிபுரியும் நபர்கள் நாள் முழுவதும் ஏசியில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியாக தினமும் நாள் முழுவதும் ஏசியில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்வோம். 

டிஹைடிரேஷன்: ஏசி காற்றை வறண்டு போக செய்து உங்கள் உடலில் உள்ள திரவங்களை விரைவாக இழக்க செய்கிறது. எனவே ஏசி அறையில் இருக்கும் போது அதிக அளவு தண்ணீர் குடித்து உங்கள் உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

எல்லாவற்றையும் உலர்த்துகிறது: ஏசியில் இருந்து வரும் உலர்ந்த காற்று வறண்ட சருமம், கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். 

குறைவான நோய் எதிர்ப்பு சக்தி: தொடர்ச்சியாக உங்களை குளிருக்கு வெளிப்படுத்திக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழந்து உங்களுக்கு எளிதில் சளி பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்: ஏசி யூனிட்டுகளை சரியாக பராமரிக்காவிட்டால் அதனால் அலர்ஜி மற்றும் பிற சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். 

விறைத்து போதல்: அதிகப்படியான குளிர்ந்த வெப்பநிலை தசைகள் மற்றும் மூட்டுகளை விறைத்துப் போக செய்கிறது. அதிலும் குறிப்பாக நீங்கள் அதிகமாக எழுந்து நடமாடா விட்டால் இந்த பிரச்சனை உங்களுக்கு மோசமாகலாம். 

வானிலையை சார்ந்திருத்தல்: எப்பொழுதும் ஏசி அறையில் இருக்கும் போது உங்களுடைய உடலானது கட்டுப்படுத்தப்பட்ட ஏசி சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும். இதனால் இயற்கையான வெப்பநிலை மாற்றத்தை கையாள்வது உங்களுக்கு சிக்கலாகலாம். 

எனவே இந்த பிரச்சனைகளை எப்படி தவிர்க்கலாம் என்பதையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்:- 

ஏசி மூலமாக வரும் உலர்ந்த விளைவுகளை தவிர்ப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். 

கண்கள் மற்றும் சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஹியூமிடிஃபையர் மூலமாக காற்றில் ஈரப்பதத்தை சேர்க்கவும். 

அவ்வப்போது ஏசி அறையை விட்டு வெளியே சென்று இயற்கையான காற்றை சுவாசித்தால் வெவ்வேறு வெப்ப நிலைகளுக்கு உங்களுடைய உடல் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும். 

உங்களுடைய ஏசி சிஸ்டத்தை வழக்கமான முறையில் சுத்தம் செய்து பராமரிப்பதன் மூலமாக அதில் தூசி மற்றும் பாக்டீரியா படிவதை தவிர்க்கலாம். 

ஏசியில் டெம்பரேச்சர் அமைக்கும் போது மிகக் குறைந்த டெம்பரேச்சரை அமைக்க வேண்டாம். அதனால் விறைப்பு தன்மை மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். 

உங்களுடைய சருமத்திற்கு போதுமான நீர்ச்சத்தை தந்து அதனை ஆரோக்கியமாக வைப்பதற்கு மாய்ஸரைசர் பயன்படுத்துங்கள்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 135

    0

    0