குளிர் காலத்தில் இருப்பதிலேயே கஷ்டமான ஒரு விஷயம் எதுவென்று கேட்டால் தலைமுடியை அலசுவது என்று கூறலாம். ஆனால் தலைமுடியை வெந்நீரில் அலசுவதால் நல்லதை விட கெட்டது அதிகமாக ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெந்நீர் தலைமுடி மற்றும் மயிர் கால்களில் உள்ள இயற்கை எண்ணெய்களை முழுவதுமாக அகற்றி, அதனை வறண்டு போக செய்து, எளிதில் உடைய கூடியதாக மாற்றிவிடும். எனவே உங்களுடைய தலைமுடியை அலசுவதற்கு வெந்நீரை தவிர்ப்பது மிகவும் நல்லது. வெந்நீர் தலைமுடியில் உள்ள தோல் பட்டைகளை திறக்க செய்து தலைமுடியை சேதம் மற்றும் எளிதில் உடைந்து போவதற்கு வழிவகுக்கிறது.
மேலும் வெந்நீர் பயன்படுத்தும் போது மயிர்க்கால்களில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். எனவே உங்களுடைய தலைமுடியை அலசுவதற்கு குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது சிறந்தது. எனவே இந்த பதிவில் தலைமுடிக்கு வெந்நீர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
தலைமுடியின் தோல் பட்டை சேதம்
வெந்நீர் தலைமுடியின் வெளிப்புற அடுக்கான தோல் பட்டையை சேதப்படுத்தி ,அதனால் தலைமுடி வலுவிழந்து, எளிதில் சேதமாவதற்கு காரணமாகிறது.
இதையும் படிக்கலாமே: நொடிப்பொழுதில் தூக்கத்தை வரவழைக்கும் இரவு பானங்கள்!!!
மயிர் கால்களில் எரிச்சல்
தலைமுடிக்கு வெந்நீர் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த மயிர் கால்களின் எரிச்சலின் விளைவாக அரிப்பு மற்றும் பொடுகு வரலாம்.
தலைமுடி உதிர்வு
வெந்நீரை பயன்படுத்தி தலைமுடியை அலசும் போது உங்களுடைய தலைமுடி டல்லாக, அதிக சிக்கு நிறைந்து, எளிதில் உடைய கூடியதாக மாறும். இதனால் உங்களுடைய தலைமுடி உடைந்து தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது.
இயற்கை எண்ணெய்கள் அகற்றப்படுதல்
அடிக்கடி தலைமுடியை வெந்நீரில் அலசுவதால் மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு, அதனால் தலைமுடி வறண்டு, எளிதில் உடைய கூடியதாக மாறுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.