தெகிட்ட தெகிட்ட அழகை அள்ளித்தரும் குடை மிளகாய்!!!

Author: Hemalatha Ramkumar
11 June 2023, 3:35 pm

சருமத்திற்கு வெளிப்புறமாக செலுத்தப்படும் கவனிப்பு மட்டுமே நிச்சயமாக போதாது. உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே அது இயற்கையாகவே உங்கள் சருமத்தில் பிரதிபலிக்கும். எனவே சருமத்தை தனியாக கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது அழகான சருமத்தை எளிதில் அடைய உதவும். நமது சருமத்திற்கு குறிப்பாக நன்மை தரக்கூடிய பல உணவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று குடைமிளகாய். இந்த பதிவில் குடைமிளகாய் சாப்பிடுவதால் நமது சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

குடைமிளகாய் வைட்டமின் சி -யின் சிறந்த ஆதாரம். பச்சை, சிவப்பு அல்லது மஞ்சள் என எல்லா வகையான குடைமிளகாய்களிலும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி செய்து சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது. மேலும் வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் கை கொடுக்கிறது.

வரண்டு போன சருமத்தை நிச்சயமாக உங்களால் மறைக்க முடியாது. குடைமிளகாய் உங்கள் சருமத்திற்கு இயற்கையாக ஈரப்பதம் வழங்கக்கூடிய ஒரு அற்புதமான மாய்சரைசர். குடைமிளகாயில் உள்ள அதிக நீர்ச்சத்து காரணமாக அது உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்கிறது. குடைமிளகாயில் 92 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது.

நீங்கள் போதுமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை உங்கள் சருமத்தின் பளபளப்பு வைத்து புரிந்து கொள்ளலாம். கூடுதலாக உங்களுக்கு முகப்பரு, கருவளையம் இல்லாத தெளிவான சருமம் வேண்டுமென்றால் குடைமிளகாயை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குடைமிளகாயில் உள்ள வைட்டமின் சி வயதாகும் அறிகுறிகளை தாமதப்படுத்த உதவுகிறது.

உங்களுக்கு அடிக்கடி சருமத்தில் பிரச்சனை ஏற்படுமாயின் குடைமிளகாயை தினமும் சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதில் உள்ள ஏராளமான ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் உள்ள சேதத்தை விரைவில் குணப்படுத்தும். சருமத்தில் ஏதேனும் வீக்கம் அல்லது வறட்சி இருப்பினும் அதனை சரி செய்ய உதவும்.

குடைமிளகாயில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் காணப்படுவதால் இது UV கதர்களுக்கு எதிரான சேதங்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இதன் மூலம் உங்கள் சருமத்தின் தொனி மேம்படுத்தப்பட்டு மினுமினுப்பாக மாறும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!