பிசியான அம்மாக்களுக்காவே இந்த சரும பராமரிப்பு டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar13 November 2024, 3:40 pm
திருமணத்திற்கு முன்பு நம்முடைய சருமத்தை பார்த்துக்கொண்ட அளவுக்கு திருமணத்திற்கு பிறகு நம்மால் பார்த்துக் கொள்ள இயலாது. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் நிச்சயமாக நமக்கென்ற நேரம் மிகக் குறைவாகவே இருக்கும். இப்படி எப்போதும் குடும்பம்… குடும்பம் என்று பிசியாக இருக்கும் அம்மாக்கள் தங்களுடைய சருமத்தை மிக குறைந்த நேரத்தில் கவனித்துக் கொள்ள உதவும் சில சரும பராமரிப்பு குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
ஹைட்ரேஷன்
நீர்ச்சத்து இழப்பு உங்கள் முகத்திற்கு சோர்வான தோற்றத்தை அளிக்கும். எனவே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே உங்கள் சருமம் மினுமினுக்க ஆரம்பித்து விடும். அதிக அளவு தண்ணீர், இளநீர், ஃபிரெஷ் ஜூஸ் அல்லது மோர் போன்றவற்றை நீங்கள் சாப்பிடலாம். இது உங்களுடைய ஆற்றல் அளவை பராமரித்து அதே நேரத்தில் உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கும்.
காலை நேர சரும பராமரிப்பு வழக்கம்
கிளென்சர்:
காலையில் மைல்டான ஒரு கிளேன்சர் பயன்படுத்தி சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி விடுங்கள். கிளென்சர் என்று சொல்லும் பொழுது நல்ல ஹைட்ரேட்டிங் கிளென்ஸர் பயன்படுத்துவது உங்கள் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் அதே நேரத்தில் அதில் உள்ள அழுக்குகளை அகற்றும்.
இதையும் படிக்கலாமே: உங்களுடைய காலையை ஆரம்பிக்க இதைவிட சிறந்த ஒன்று இருக்க முடியுமா என்ன…???
சீரம்:
முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு அதற்கு தேவையான ஈரப்பதத்தையும், போஷாக்கையும் நீங்கள் வழங்க வேண்டும். இதற்கு நீங்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த சீரம் பயன்படுத்துவது அவசியம். இதில் உள்ள வைட்டமின் C உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை அளிக்கும்.
மாய்சரைசிங்:
இதன்பிறகு உங்கள் சருமத்திற்கு லைட் வெயிட் ஹைட்ரிட்டிங் மாய்சரைசர் பயன்படுத்துவது அதில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு உதவும். உதாரணமாக ஹையாளுரானிக் அமிலம் அல்லது கிளிசரின் போன்ற பொருட்களால் ஆன மாய்சரைசர் உங்கள் சருமத்தை குண்டாகவும் அதே நேரத்தில் ஈரப்பதத்தோடும் இருப்பதற்கு உதவும்.
சன் ஸ்கிரீன்:
நீங்கள் வீட்டிற்குள் நேரத்தை செலவு செய்தாலும் சரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு மறக்காதீர்கள். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் UV கதிர்கள் உங்களுக்கு முன்கூட்டிய வயதான அறிகுறிகள் அல்லது வேறு சில சரும பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
உடனடி குலோ தரும் ஃபேஸ் மாஸ்க்
வீட்டில் செய்யப்பட்ட ஃபேஸ் மாஸ்க் நிச்சயமாக உங்களுக்கு நம்ப முடியாத ஆச்சரியங்களை ஏற்படுத்தும். அதற்கு நீங்கள் தேன் மற்றும் தயிரை சம அளவு கலந்து முகத்தில் தடவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து அதனை பொலிவோடு இருக்கச் செய்யும். தேனானது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். அதே நேரத்தில் தயிர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். தேன் இல்லாத போது பால் மற்றும் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து பயன்படுத்துவது உங்களுக்கு உடனடி பொலிவை தரும். மஞ்சள் தூளில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்பு சருமத்தை மென்மையாக்கும். மேலும் பால் உங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.
நைட் கிரீம்
சருமத்தை சுத்தம் செய்த பிறகு சீரம் பயன்படுத்துங்கள். அதன் பிறகு நீங்கள் நைட் கிரீம் பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் தூங்கும் பொழுது கூட சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு உதவும். தூங்குவதற்கு முன்பு குளிர்ந்த ஸ்பூனை முகத்தில் ஒத்தி எடுப்பது அதற்கு நல்ல ஒரு மசாஜை கொடுக்கும்.