நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும் ஸ்மார்ட் பேண்டேஜ் கண்டுபிடிப்பு… முழு விவரம் உள்ளே!!!

Author: Hemalatha Ramkumar
5 April 2023, 5:48 pm

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்களால் பயோசென்சர்களுடன் கூடிய நெகிழ்ச்சி தன்மைக் கொண்ட எலக்ட்ரானிக் பேண்டேஜ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்டேஜ் நீரிழிவு புண்கள் உட்பட நாள்பட்ட காயங்களைக் கண்காணிக்கவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படலாம்.

ஸ்மார்ட் பேண்டேஜ் என்றால் என்ன?
ஸ்மார்ட் பேண்டேஜ்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்களுக்கான சிகிச்சையில் உதவக்கூடிய திறன் கொண்டது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப பதிலளிக்கும் வகையில் இந்த பேண்டேஜ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சென்சார்கள் உள்ளது. அவை தொற்று, வீக்கம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றங்களின் அறிகுறிகளைக் கண்டறிய உதவும். காயத்தின் நிலையை விரைவாகவும் துல்லியமாகவும் மதிப்பிடவும், அந்த காயத்திற்கு ஏற்ற சிகிச்சையை வழங்கவும் இது மருத்துவர்களுக்கு உதவும். கண்காணிப்பு திறன்களுடன் கூடுதலாக, வீக்கத்தைக் குறைக்க, தொற்றுநோயை எதிர்த்துப் போராட அல்லது குணப்படுத்துவதை ஊக்குவிக்க மருந்துகள் அல்லது பிற சேர்மங்களை வெளியிடுவதன் மூலம் ஸ்மார்ட் பேண்டேஜ்கள் நேரடி சிகிச்சை பலன்களையும் அளிக்கிறது. இதனால் நோயாளிகள் முன்பை விட வேகமாக காயங்களிலிருந்து விரைவில் குணமடைய முடியும்.

நீரிழிவு நோயாளிகள் ஸ்மார்ட் பேண்டேஜ் மூலம் பயனடைய முடியுமா?
ஸ்மார்ட் பேண்டேஜ்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்களில் இருந்து விரைவாக மீட்க உதவும் திறன் கொண்டது.
இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிற நாட்பட்ட நிலைகளையும் கண்காணிக்க ஸ்மார்ட் பேண்டேஜ்கள் பயன்படுத்தப்படலாம். ஸ்மார்ட் பேண்டேஜ்கள் வெப்பநிலை, இதய துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் போன்ற முக்கிய அறிகுறிகளை அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் பேண்டேஜ்கள் தேவைக்கேற்ப மருந்துகளை வெளியிடுகிறது. இது நிலைமையை மிகவும் திறம்பட நடத்த உதவுகிறது. இது மருத்துவமனை வருகைகளைக் குறைப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

ஸ்மார்ட் பேண்டேஜ்கள் குறித்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளன. ஆனால் இந்த பேண்டேஜின் காயம் குணப்படுத்தும் திறன் மறுக்க முடியாதது. அவை நீரிழிவு நோயாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 376

    0

    0