தொண்டைப்புண் இருக்கும் போது இந்த மாதிரி உணவுகள சாப்பிடுங்க… சீக்கிரம் சரியாகிடும்!!!

Author: Hemalatha Ramkumar
24 அக்டோபர் 2024, 10:39 காலை
Quick Share

மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் தொண்டைப்புண் ஒன்று. தொண்டைப்புண் என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது வலி மற்றும் மோசமான அசௌகரியத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான நேரங்களில் சளி அல்லது சுவாச தொற்றுக்கான முதல் அறிகுறி என்பது மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உடம்பு சரி இல்லாமல் போதல் மற்றும் இதனுடன் சேர்ந்து நமக்கு எந்த ஒரு உணவையும் சாப்பிட பிடிக்காது. எனினும் மருத்துவர்களை பொறுத்தவரை இந்த சமயத்தில் நாம் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குணமடையும் செயல்முறை விரைவாக நடக்கும். எனவே தொண்டை புண் இருக்கும் போது வெதுவெதுப்பான பானங்கள் மற்றும் உணவுகள் அதாவது உங்கள் தொண்டையை பாதிக்காத மென்மையான உணவுகளை சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களால் எளிதில் விழுந்த கூடிய, காரம் அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடலாம். உதாரணமாக சூடான சூப் அல்லது எலுமிச்சை டீ போன்றவற்றை பருகலாம். மேலும் வெதுவெதுப்பான உப்பு தண்ணீரை வாயில் சிறிது நேரம் வைத்து கொப்பளிக்கலாம். இது உங்களுடைய தொண்டையை ஆற்றும். இப்போது தொண்டை புண்ணை இன்னும் மோசமாக்காமல் பாதுகாப்பாக அமையும் சில உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம். 

சூடான மற்றும் சமைக்கப்பட்ட ஓட் மீல் 

ஓட்மீலில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்களும் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் அதிகமாக உள்ளது. நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதற்கு இது ஒரு அற்புதமான உணவு. 

ஜெலட்டின் அடிப்படையிலான இனிப்புகள் 

இது மருத்துவ ரீதியாக எந்த ஒரு பலனையும் அளிக்காவிட்டாலும் ஜெலட்டினின் மென்மையான அமைப்பு நமக்கு விழுங்குவதற்கு எளிதாக இருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் அறை வெப்பநிலையில் உள்ள பழக்கூழ் சேர்க்கப்பட்ட தயிரை சாப்பிடலாம். 

தேன் 

தேனில் அற்புதமான மருத்துவ பலன்கள் உள்ளது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது. ஆனால் இதில் அதிக சர்க்கரை அளவு இருப்பதால் உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு அதன் வேலையை சிறப்பாக செய்வதை தடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தேனை குறைவான அளவில் சாப்பிட வேண்டும். 

இஞ்சி 

இஞ்சியில் இயற்கை ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால் இது வீக்கத்தை குறைத்து, பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அது மட்டுமல்லாமல் இது வாந்தியை தடுக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே: தீபாவளி ஸ்பெஷல்: தனித்துவமான ருசில பாம்பே ஸ்பெஷல் ஐஸ் ஹல்வா!!!

ஐஸ்கிரீம் 

பொதுவாக சளி பிடித்திருக்கும் போது ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சொல்வது வழக்கம். ஆனால் இந்த நம்பிக்கைக்கு மாறாக குளிர்ந்த உணவுகளான ஐஸ்கிரீம் சாப்பிடுவது தொண்டை புண்ணை ஆற்றி வீக்கத்தை குறைக்கும். எனினும் அதிக அளவு சாப்பிடாமல் இருக்கும் வரை தான் இந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். இதில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம்.

சிக்கன் சூப் 

சளி மற்றும் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதற்கான சிறந்த  சுவையான சிகிச்சை சிக்கன் சூப். இது தொற்றுகளை எதிர்த்து போராடி மூக்கில் உள்ள சளி விரைவாக வெளியேறுவதற்கு உதவுகிறது. 

சூடான மசித்த உருளைக்கிழங்குகள் 

இது மென்மையாக விழுங்குவதற்கு மிக எளிதாக இருப்பதால் உடம்பு சரியில்லாத சமயத்தில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக அமைகிறது. மெக்னீசியம், வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த உருளைக்கிழங்கு வலுவான நோய் எதிர்ப்பு  அமைப்பை தருகிறது. 

முட்டை 

புரோட்டின், வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 ஆகியவற்றுடன் சிங்க் இரும்புச்சத்து மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்த முட்டை தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது.

எனவே அடுத்த முறை உங்களுக்கு தொண்டைப்புண் ஏற்படும் போது இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு சாப்பிடுவதற்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். அதே நேரத்தில் தொண்டைப்புண் விரைவாக குணமாகும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Momos மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 50 பேர் கவலைக்கிடம் : உஷார் மக்களே.!!
  • Views: - 73

    0

    0

    மறுமொழி இடவும்