ஆரோக்கியம்

குளிருக்கு இதமா சூப்… கூடுதல் போனஸா நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்குது…!!!

குளிர்கால சூப்புகள் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக அமைந்து நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, குளிர்கால மாதங்களில் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சூப்பு பொதுவாக பூண்டு, இஞ்சி, மஞ்சள் மற்றும் வேர் காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுவதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மிகவும் உதவுகிறது. சூப்புகள் நல்ல நறுமணத்தோடு, சுவையாக, ஊட்டச்சத்து மிகுந்ததாக அமைகிறது. இந்த ஊட்டச்சத்து அதிகம் உள்ள சூப்புகளை சாப்பிடுவது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர் காலத்தில் ஏற்படும் பொதுவான சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

மேலும் சூப் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தி நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது. ஏனெனில் சூப் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் முக்கியமான மினரல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் உங்களுடைய குளிர்கால உணவோடு சேர்த்து சாப்பிட வேண்டிய சில சூப் வகைகளை பற்றி பார்க்கலாம்.

இஞ்சி எலுமிச்சை சூப் 

இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டுமே நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கு பெயர் போனது. எலுமிச்சை நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் அத்தியாவசியமான வைட்டமின் C சத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் இஞ்சி வீக்கத்தை குறைத்து, தொண்டை புண்ணை ஆற்றுகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கு கேரட் சூப் 

சர்க்கரைவள்ளி கிழங்குகள் இந்த குளிர் காலத்தில் சேர்க்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று. இந்த சூப் சாப்பிடுவதால் நமக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைத்து நம்முடைய உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். அதிலும் இதனோடு கேரட்டுகளை இணைக்கும் பொழுது அதில் உள்ள பீட்டா கரோட்டின் நம்முடைய உடலுக்கு மிகவும் தேவையானதாக அமைகிறது.

காளான் பூண்டு சூப் 

காளானில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் மற்றும் பீட்டா குளுக்கான்கள் இருப்பதால் இது ரத்த வெள்ளை அணுக்களை ஆக்டிவேட் செய்து, தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது. காளான் மற்றும் பூண்டு சூப் சுவையான அதே நேரத்தில் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஊட்டச்சத்து மிகுந்த வழி.

இதையும் படிச்சு பாருங்க:  உட்கார்ந்து கொண்டே தொப்பை கொழுப்பை குறைக்க நச்சுன்னு நாலு வழி இருக்கு… கேட்க நீங்க தயாரா…???

கீரை பருப்பு சூப் 

கீரையில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் C அதிகமாக உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. அதே நேரத்தில் பருப்பு வகைகள் தாவரம் சார்ந்த புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்துக்கான சிறந்த மூலமாக அமைகிறது. மஞ்சளில் காணப்படும் வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சூப்பை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றி குளிர்கால சளிக்கு எதிராக செயல்படுகிறது.

தக்காளி துளசி சூப் 

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நோய்களுக்கு எதிராக நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த சூப் சுவையாகவும், ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் அமைந்து உடலில் ஏற்படும் வீக்கத்தை இயற்கையான முறையில் குறைக்கிறது. இதன் மூலமாக நமக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவது குறையும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

6 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

8 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

8 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

8 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

9 hours ago

This website uses cookies.