பனிக்காலத்தில் ஏற்படும் டிரை ஸ்கின் பிரச்சினையை ஒரேடியா விரட்ட 4 சூப்பர்ஃபுட் இருக்கு!!!
Author: Hemalatha Ramkumar17 December 2024, 2:38 pm
குளிர்காலத்தில் பொதுவாக நம்முடைய சருமம் வறண்டு, பொலிவில்லாமல் இருக்கும். இதற்கான தீர்வுகளை தேடி நாம் நிச்சயமாக பல முயற்சிகளை செய்திருப்போம். எனினும் இந்த சரும பிரச்சனையை சமாளிப்பதற்கு ஒரு சில சரும பராமரிப்பு தீர்வுகள் உள்ளன. சரும பராமரிப்பு சிகிச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், இயற்கையாகவே உங்களுடைய சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கி, அவற்றை மினுமினுப்பாக மாற்றுவதற்கு உதவ ஒரு சில சூப்பர்ஃபுட்கள் உள்ளன. அந்த வகையில் உங்களுடைய சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு உதவும் ஒரு சில குளிர்கால சூப்பர்ஃபுட்டுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நெய்
நெய் ஒரு அற்புதமான ஹைட்ரேடிங் தைலமாக செயல்படுகிறது. சிறிதளவு நெய்யை உங்களுடைய உள்ளங்கையில் எடுத்து அதனை உங்கள் முகத்தில் தேய்த்து பொறுமையாக மசாஜ் செய்து வர சருமத்தில் உள்ள ஈரப்பதம் லாக் செய்யப்பட்டு, விரிசல் நிறைந்த பகுதிகள் ஆற்றப்படும்.
கற்றாழை மற்றும் நல்லெண்ணெய்
கற்றாழை என்பது குளிர் காலத்தில் உங்களுடைய சருமத்தை பொலிவுடன் வைப்பதற்கு ஒரு அற்புதமான பொருளாக அமைகிறது. இதனை நல்லெண்ணையோடு சேர்த்து ஒரு ஓவர் நைட் பாமாக நீங்கள் பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ள பண்புகள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E இந்த ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது. கற்றாழை ஜெல்லோடு சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து உங்களுடைய முகம் மற்றும் கைகளில் தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்யும் பொழுது அடுத்த நாள் காலை உங்களுடைய சருமம் மென்மையாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
நெல்லிக்காய் மற்றும் குங்குமப்பூ ஃபேஸ் பேக்
நெல்லிக்காய் ஃபேஸ் பேக் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கி, அதனை பளபளக்க செய்து, சருமத்தின் தொனியை மேம்படுத்துகிறது. இதற்கு நீங்கள் நெல்லிக்காயோடு பாதாம் பேஸ்ட், தேன், மஞ்சள் தூள் மற்றும் நல்லெண்ணெயில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து ஒரு ஃபேஸ் பேக்கை தயார் செய்யலாம். இதனை உங்களுடைய முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளுங்கள். நெல்லிக்காய் மற்றும் குங்குமப்பூ சருமத்தை பளிச்சிட செய்யும், அதே நேரத்தில் மஞ்சள் மற்றும் தேன் சருமத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் பாதாம் பருப்பு மற்றும் நல்லெண்ணெய் சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கு அதற்கு ஈரப்பதத்தை வழங்கும்.
இதையும் படிச்சு பாருங்க: இந்த ஜூஸ் தினமும் உங்க டயட் இருந்தா யங் லுக் உங்களுக்கு சொந்தம்!!!
பாதாம் பிசின்
சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குவதற்கு நீங்கள் பாதாம் பிசினை தண்ணீர் அல்லது பாலோடு கலந்து பயன்படுத்தலாம். பிறகு இதில் சிறிதளவு வெல்லம் மற்றும் நெய் சேர்த்து பருகுவது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அதில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கும். இதனால் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உங்களுக்கு மென்மையான மற்றும் மினுமினுப்பான சருமம் கிடைக்கும். பாதாம் பிசின் என்பது சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. வெல்லம் சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. மேலும் நெய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி உங்களுடைய சருமத்தை போஷாக்கும் மிகுந்ததாகவும், பாதுகாப்பாகவும் வைக்கிறது.
இந்த தீர்வுகள் உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கமாக மட்டுமல்லாமல், உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தையும் வழங்கும். எனினும் இந்த தீர்வுகளை முயற்சி செய்து பார்ப்பதற்கு முன்பு பேட்ச் சோதனை செய்து பார்ப்பது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.