குளிர் காலம் வந்து விட்டாலே குறிப்பிட்ட ஒரு சில ஆறுதல் தரும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். ஆனால் அப்படி ஆறுதல் தரும் உணவு ஆரோக்கியமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். பதப்படுத்தப்பட்ட, அதிக கலோரிகள் நிறைந்த ஆப்ஷன்களுக்கு செல்வதற்கு பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் ஃபுட்களை சாப்பிடுவது உடலுக்கு தேவையான கதகதப்பை வழங்கி, அதே நேரத்தில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற எரிபொருட்களை நம்முடைய உடலுக்கு வழங்கும்.
இந்த சூப்பர் ஃபுட்கள் உடலின் வெப்பநிலையை சீராக்கி, ஆற்றல் அளவுகளை அதிகரித்து, வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் பருவ கால நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது. ஆகவே குளிர்காலத்தில் உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய 5 சூப்பர் ஃபுட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி
உடலுக்கு சூட்டை தரும் பண்புகள் இஞ்சியில் காணப்படுகிறது. ஆன்டி-ஆக்சிடன்கள் நிறைந்த இஞ்சி நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு அளித்து, செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆறுதல் அளிக்கும் உணவாகவும் அமைகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் நம்முடைய உடலில் வைட்டமின் A ஆக மாற்றப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியம் மற்றும் பார்வை திறனை மேம்படுத்துகிறது.
மஞ்சள்
மஞ்சளை நீங்கள் வழக்கமாக சாப்பிடும் சூப், குழம்பு மற்றும் பிற உணவு வகைகளில் சேர்த்து பயன்படுத்தலாம். இது தவிர பாலில் மஞ்சள், தேன் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்த்து சாப்பிடுவது இந்த குளிருக்கு ஏற்ற ஒரு சிறந்த பானமாக அமைகிறது.
குடைமிளகாய்
குடைமிளகாய்களில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது பருவ கால நோய்களுக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
இதையும் படிக்கலாமே: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாரம் ஒரு முறை இத மட்டும் பண்ணுங்க!!!
ஓட்ஸ்
இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற காலை உணவாக ஓட்ஸ் அமைகிறது. இந்த முழு தானியங்களில் மெதுவாக செரிமானமாகும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது நம்முடைய உடலுக்கு நிலையான ஆற்றலை அளித்து, ரத்த சர்க்கரை அளவுகள் திடீரென அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.