40 வயதுக்கு பிறகு இதெல்லாம் பண்ணாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
10 September 2024, 3:39 pm

நமக்கு 40 வயது ஆகும் பொழுது நமது உடலானது பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகிறது. இதன் காரணமாக ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவது அவசியம். இது வயதாகும் செயல்முறையை குறைக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும். அந்த வகையில் 40 வயதிற்கு பிறகு நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது

நமக்கு வயதாகும் பொழுது நம்முடைய தசைகள், எலும்புகள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடற்பயிற்சிகள் என்பது மிகவும் அவசியமானவை. உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டால் அதனால் உடல் எடை அதிகரிக்கலாம். மேலும் உடலின் நெகிழ்வுத் தன்மை குறையும். அதன் விளைவாக பல்வேறு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் உருவாகிறது. 

40 வயதுக்கு பிறகு வலிமை பயிற்சிகள் செய்வதை நிறுத்துவது 

இந்த வகையான ஒர்க்கவுட் என்பது வயதாகும் பொழுது தசை இழப்பை தவிர்ப்பதற்கு அவசியமானது. வலிமை பயிற்சி செய்வதை நீங்கள் நிறுத்திவிட்டால் அதனால் நிலை தடுமாற்றம் ஏற்பட்டு கீழே விழுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. எனவே எதிர்ப்பு திறன் பயிற்சிகள் மற்றும் வலிமை பயிற்சிகளை செய்வதன் மூலமாக உங்களுடைய தசை வலிமையை பராமரித்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். 

போதுமான அளவு தூக்கம் பெறாமல் இருப்பது 

தூக்கம் என்பது உங்கள் உடலுக்கு, மனதுக்கு ஓய்வு அளிக்க மிகவும் அவசியமானது. உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால் அது மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் இது உங்கள் மனநிலையையும் பாதிக்கலாம். எனவே தினமும் 7 முதல் 9 மணி நேரம் தரமான தூக்கம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். 

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சார்ந்திருத்தல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, ஹைப்பர் டென்ஷன் மற்றும் பிற உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே எப்பொழுதும் முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் முழு தானியங்களை சாப்பிட்டு உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் அளவை பராமரித்து கொள்ளுங்கள். 

உங்களுடைய மன ஆரோக்கியத்தை கவனிக்காமல் இருப்பது 

மன ஆரோக்கியம் என்பது நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் மன அழுத்தம் மற்றும் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக உங்களுடைய மன ஆரோக்கியம் குறைகிறது. மன ஆரோக்கியத்தை கவனிக்காமல் விடுவதால் பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவை ஏற்படலாம். 

புகையிலை சாப்பிடுவது புகையிலை சாப்பிடுவதால் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பல்வேறு மோசமான நோய்கள் ஏற்படலாம். எனவே கட்டாயமாக புகையிலை சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். இது உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவும். 

வழக்கமான ஹெல்த் செக்கப் செய்யாமல் இருப்பது 

வழக்கமான ஹெல்த் செக்கப் செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக வயதாகும் பொழுது இதனை நீங்கள் கட்டாயமாக செய்ய வேண்டும். ஒரு சில நோய்கள் அல்லது நிலைகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க இதனை செய்வது அவசியம். 

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது 

செரிமானம், ரத்த ஓட்டம் மற்றும் வெப்பநிலை சீரமைப்பு போன்ற உடலின் செயல்பாடுகள் சீராக நடப்பதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து தேவை. எனவே நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். 

சமூகத்தோடு பழகாமல் இருப்பது 

சமூகம் சார்ந்த செயல்பாடுகளை நீங்கள் குறைத்து விட்டால் அது உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சமம். இதனால் உங்களுடைய மனது மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். 

தோரணைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது 

மோசமான தோரணை முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். எனவே எல்லா நேரத்திலும் உங்களுடைய தோரணையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 

Health, exercise, ஆரோக்கியம்

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 231

    0

    0