எல்லாரும் சொல்றாங்களேன்னு உங்க பாட்டுக்கு சியா விதைகளை சாப்பிட்டுறாதீங்க… அதுக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
19 December 2024, 5:24 pm

ஊட்டச்சத்து மிகுந்த சூப்பர்ஃபுட்டான சியா விதைகளில் நார்ச்சத்து, புரோட்டின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனை உங்களுடைய அன்றாட உணவில் சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த சியா விதைகள் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திற்கு எதிராக உடலை பாதுகாக்கிறது. மேலும் வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பையும் வழங்குகிறது. கூடுதலாக இது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடுவது முதல் ஓட்ஸ் உடன் இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடுவது வரை நம்முடைய அன்றாட வழக்கத்தில் சியா விதைகளை பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். சியா விதைகள் ஒரு பல்துறை உணவு. இது எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவு பொருள். ஆனால் சியா விதைகளை சாப்பிடும் பொழுது நாம் ஒரு சில தவறுகளை செய்வதுண்டு. அப்படி சியா விதைகளை சாப்பிடும் சமயத்தில் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில எளிமையான விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கவனத்தோடு சாப்பிடுவது

சியோ விதைகளில் பல நன்மைகள் இருந்தாலும் அதனை அளவாக சாப்பிடுவது அவசியம். அளவுக்கு அதிகமாக சியா விதைகளை சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை போன்ற செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். மேலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சமநிலையை சீர்குலைத்து, ஒரு சில மருந்துகளுடனும் குறுக்கிடலாம்.

சரியான முறையில் சேமித்து வைப்பது 

சியா விதைகளை நீங்கள் முறையாக சேமித்து வைப்பது அவசியம். அவ்வாறு செய்வது அதனை பாதுகாப்பாகவும், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாமலும் பார்த்துக் கொள்ளும். அலட்சியமாக நீங்கள் அதனை வைக்கும் பொழுது அது கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே எப்பொழுதும் சியா விதைகளை நேரடி சூரிய வெளிச்சத்தில் இருந்து தொலைவாக ஏர்டைட் கண்டைனர்களில் ஈரப்பதம் இல்லாமல் வைக்கவும்.

ஊற வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும் \

சியா விதைகளை ஒருபோதும் ஊற வைக்காமல் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வறண்ட விதைகள் நம்முடைய வயிற்றில் விரிவடையும்போது அதனால் வயிற்று உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகள் வரலாம். சியா விதைகளை ஊறவைக்கும் போது அது தண்ணீரை உறிஞ்சி செரிமானம் ஆவதற்கு எளிதாக இருக்கும். மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகமாகும். சியா விதைகளை நீங்கள் தண்ணீர், பாதாம் பால் அல்லது தயிரில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து சாப்பிடலாம்.

இதையும் படிச்சு பாருங்க: சருமம் தங்கம் போல ஜொலிக்க ஆசையா… அப்போ இந்த பொருள் உங்களுக்கு அவசியம் தேவை!!!

சியா விதைகளுடன் சாப்பிட வேண்டிய பிற உணவுகள் 

சியா விதைகளின் முழு பலன்களை பெறுவதற்கு நீங்கள் அதனை சரியான உணவுகளோடு சேர்த்து சாப்பிட வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், வறண்ட நட்ஸ் அல்லது பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களோடு சியா விதைகளை சாப்பிட வேண்டாம். மாறாக சியா விதைகளை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளோடு சாப்பிடுவது போஷாக்கு உறிஞ்சிதலை அதிகப்படுத்தி, உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக கலக்க வேண்டும் 

சியா விதைகளை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் நன்றாக கலக்காவிட்டால் அவை ஒரே இடத்தில் குவிந்து சமமற்ற செரிமானத்தை உண்டாக்கும். இதனால் வயிற்றில் அது ஜெல் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதனால் உங்களுக்கு அசௌகரியம் உண்டாகும். ஆகவே தண்ணீர் அல்லது நீங்கள் சியா விதைகளை ஊற வைத்த திரவத்தை சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக கலப்பது அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!