உங்க கண்களுக்கு வயசாகாமல் இருக்க நீங்க செய்ய வேண்டியது!!!

Author: Hemalatha Ramkumar
4 November 2024, 7:34 pm

நமக்கு வயதாக வயதாக நம்முடைய கண்கள் உட்பட உடல் முழுவதும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. பல இயற்கை மாற்றங்கள் காரணமாக நம்முடைய பார்வை திறன் மற்றும் ஒட்டுமொத்த கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முதுமையில் இருந்து நம்முடைய கண்களை பாதுகாப்பது என்பது வெறும் பார்வை திறனை மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கை தரம் மற்றும் வயதான காலத்தில் நமது சுதந்திரத்தையும் குறிக்கிறது. உங்கள் கண்கள் முதுமையாகும் செயல்முறையை குறைப்பதற்கும், ஆரோக்கியமான பார்வை திறனை பெறுவதற்கும் உதவும் ஒரு சில முக்கியமான குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். 

அருகில் இருக்கும் பொருட்களை பார்ப்பதில் சிக்கல்கள், மங்கலான பார்வை அல்லது எதையாவது படிக்கும் பொழுது கட்டாயமாக கண்ணாடிகள் தேவைப்படுவது போன்ற பல்வேறு விஷயங்கள் முதுமைக்கான ஆரம்பகால அறிகுறிகள் ஆகும். மற்றொரு விஷயம் கண்கள் வறண்டு போவது. குறைவான கண்ணீர் உற்பத்தியின் காரணமாக கண்களில் வறட்சி, எரிச்சல் அல்லது உறுத்தல் போன்றவை ஏற்படும். 

நம்முடைய சருமம் அதன் நெகிழ்வுத் தன்மையை இழக்கும் பொழுது கண்களைச் சுற்றி கருவளையம் அல்லது வீக்கம் ஏற்படுவது வழக்கம். கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானவை என்பதால் அந்த இடங்களில் மிக எளிதாக சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் தெரிய ஆரம்பிக்கும். குறைவான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிக்கல் அல்லது இரவு நேரங்களில் பார்வை திறன் மோசமாக இருப்பது ஆகியவையும் முதுமை சம்பந்தமாக கண்களில் ஏற்படும் சில மாற்றங்கள். 

இதையும் படிக்கலாமே: 

சாமந்திப்பூ ஒன்னு இருந்தாலே உங்க சரும பிரச்சினை எல்லாத்துக்கும் முடிவு கட்டிடலாம்!!!

அதிக வெளிச்சத்தை பார்க்கும் போது கண்கள் கூசுவது, கண்களில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல், கண்களின் லென்ஸில் மேகம் போன்ற தோற்றம் உருவாகுதல் போன்றவை கேட்டராக்ட் இருப்பதற்கான சில அறிகுறிகள். இப்போது தங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், முதுமை தாக்கத்தை குறைக்கவும் உதவும் சில குறிப்புகளை பார்க்கலாம். 

சன் கிளாஸ் அணிவது

தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிடமிருந்து உங்கள் கண்களை பாதுகாக்க 100% UV பாதுகாத்துக் கொண்ட சன் கிளாஸ் அணியவும். இது கேட்டராக்ட் ஏற்படுவதை தவிர்க்க உதவும். 

செயற்கை கண்ணீர்

கண்களில் உள்ள வறட்சியை தடுப்பதற்கு வழக்கமான முறையில் ஐ ட்ராப்ஸ் பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக நீங்கள் அதிக நேரம் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் போன்றவற்றை பயன்படுத்தினாலோ அல்லது வறண்ட சுற்றுச்சூழலில் இருந்தாலும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். 

ஆரோக்கியமான உணவு வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியம். வைட்டமின்கள் A, C மற்றும் E, அதுமட்டுமல்லாமல் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கீரை, கேரட், நப்ஸ் வகைகள் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள். 

நீர்ச்சத்து 

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் மற்றும் கண்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். ஏனெனில் நீர்ச்சத்து இழப்பு வறண்ட கண்கள் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். 

20-20-20 விதி 

ஸ்க்ரீன்களை அதிகமாக பார்ப்பதால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்கு 20-20-20 விதியை பின்பற்றுங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்கவும். 

வழக்கமான கண் பரிசோதனை 

அடிக்கடி கண் பரிசோதனைகளை செய்து கொள்வது கண் தொடர்பான பிரச்சனைகளை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதற்கு உதவும். அதன் மூலமாக உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் கண்களின் ஆரோக்கியம் மற்றும் தேவைகள் அடிப்படையில் தனிப்பட்ட ஆலோசனைகளை பெறலாம்.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 132

    0

    0