பொதுவாக வெளியே செல்லும் போது, கழிப்பறை ஒரு பெரும் பிரச்சினையாகவே இருக்கும். ஒரு சிலருக்கு பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்துவது அருவருப்பாக தோன்றினாலும், வேறு வழியில்லாமல் அதனைப் பயன்படுத்துவர். பொதுக் கழிப்பறையை பயன்படுத்துவதால் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். எனவே வேறு வழியில்லாமல் பொதுக் கழிப்பறையை பயன்படுத்த நேர்ந்தால் உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய சில டிரிக்ஸ் குறித்து இப்போது பார்க்கலாம்.
நின்று சிறுநீர் கழிக்கவும்:
பொதுக் கழிவறைகளை பாதுகாப்பாக பயன்படுத்த இது ஒரு சிறந்த வழி. பல சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் இல்லாமல் போகும் அல்லது சில மாதங்களில் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
முதல் கழிப்பறைக்கு செல்லவும்
இது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால் மக்கள் பொதுவாக நுழைவாயிலில் இருந்து தொலைவில் உள்ள கழிப்பறையைத் தேர்வு செய்கிறார்கள். அது தூய்மையானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். எனவே, முதல் கழிப்பறையை எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது அல்லது பெரும்பாலானவர்களால் தவிர்க்கப்படுகிறது. அடுத்த முறை நீங்கள் பொதுக் கழிப்பறைக்குச் செல்லும் போது முதல் கழிப்பறைக்கு செல்ல முயற்சிக்கவும்.
கழிப்பறை இருக்கை:
உங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் கழிப்பறை இருக்கை அட்டைகளை எளிதாகக் காணலாம் அல்லது ஆன்லைனில் வாங்கலாம். பாதுகாப்பானதாக இருக்க உங்கள் இருக்கை அட்டைகளில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான படியாகும். இருக்கையின் மீது டிஷ்யூ பேப்பர்களைப் பரப்புவது உங்களை முழுமையாகப் பாதுகாக்காது.
ஃப்ளஷிங் நுட்பம்:
ஒரு சிறிய டிஷ்யூ பேப்பரை எடுத்து, அதில் உங்கள் விரலை முழுமையாக போர்த்தி, பின்னர் ஃப்ளஷ் பட்டனை அழுத்தவும். இது உங்கள் கைகள் அல்லது விரல்களை நேரடியாக ஃப்ளஷைத் தொடுவதிலிருந்து பாதுகாக்கும். அதே டிஷ்யூவைப் பயன்படுத்தி கதவைத் திறந்து, குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு வெளியேறவும். ஒவ்வொரு முறையும் நீங்கள் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது உங்கள் கைகளை சுத்தப்படுத்த மறக்காதீர்கள்.
தரையில் பைகளை வைக்காதீர்கள்:
கழிவறைத் தளங்கள் மிகவும் அழுக்காக இருக்கும். ஆகவே, உங்கள் பைகளை தரையில் வைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இந்தக் கிருமிகள் உங்கள் பைகளிலும் இறுதியில் உங்கள் கைகளிலும் எளிதாகப் பரவும்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.