குளிர்காலத்தில் தீவிரம் அடையும் பைல்ஸ் பிரச்சினையை சமாளிக்க டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar26 November 2022, 5:46 pm
குளிர்காலம் வந்தாலே அதனுடன் பல நோய்களும் வந்துவிடுகிறது. எனவே, இதன்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, சமச்சீரான உணவுகளை உண்பது அவசியம். அந்த வகையில் குளிர்காலம் பைல்ஸ் நோய் உள்ளவர்களுக்கு ஒரு சவாலான நேரம் ஆகும்.
மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் பைல்ஸ் நோயில் ஆசனவாய் உள்ளேயும், வெளியேயும் வீக்கம் ஏற்படுகிறது. முதலில் ஆசனவாய் நரம்புகள் வீங்கத் தொடங்குகின்றன. பைல்ஸ் நோயில் மலம் அழுத்தத்துடன் மலம் கழிக்கும் போது, தசைகள் வெளியேறி அதிலிருந்து இரத்தப்போக்கு உண்டாகிறது.
மது பானங்கள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், காரசாரமான உணவுகள், பொரித்த உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் போன்றவை பைல்ஸ் பிரச்சினையை தீவிரமாக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட மோசமான பைல்ஸ் பிரச்சினை டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் தீவிரமடையும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சினையை சமாளிக்க உதவும் சில டிப்ஸ் குறித்து பார்ப்போம்:-
*நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கக்கூடாது. இதனால் தசைகளில் அழுத்தம் அதிகரிக்கிறது.
*தளர்வான ஆடைகளை அணியவும்.
*குளிர்காலத்தில் தாகம் எடுக்காது என்றாலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
*நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை சாப்பிடுங்கள்.
*வெந்நீரில் ஆசனவாய் முழுவதுமாக நனையும்படி அமருங்கள். இது பைல்ஸ் பிரச்சினைக்கு ஒரு பாரம்பரிய சிகிச்சை முறையாகும். பதினைந்து நிமிடங்கள் இவ்வாறு செய்தால் போதும். இது அரிப்பு மற்றும் வலியை போக்க உதவுகிறது.
*தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
*எண்ணெய் நிறைந்த உணவுகள், காபி, கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
0
0