மொபைல் ரொம்ப அதிகமா யூஸ் பண்ற மாதிரி தெரியுதா… இத ஈசியா சமாளிக்க சில டிரிக்ஸ் இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
2 January 2025, 10:32 am

நீங்கள் போன் ஸ்கிரீன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து விட்டாலே உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அளவுக்கு அதிகமாக ஸ்க்ரீன் பயன்படுத்துவதால் கண்களில் அழுத்தம், தூக்க கோளாறு, அதிகமான அழுத்தம் மற்றும் அன்றாட வேலைகளை திறம்பட செய்ய முடியாமல் போதல் போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும் ஒரு சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான வரம்புகளை அமைப்பதன் மூலமாக இதனை நீங்கள் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதில் சோஷியல் மீடியாவில் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை குறைத்துக் கொள்ளுதல், அப்ளிகேஷன் பயன்பாட்டை டிராக் செய்தல் மற்றும் நேரத்தை வீணடிக்கும் பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக பயனுள்ள அப்ளிகேஷன்களை பயன்படுத்துதல் போன்றவை அடங்கும்.

நாள் முழுவதும் போன் பயன்படுத்தாமல் இருப்பது உங்களுடைய கவனத்திறனை அதிகரிக்கும். மேலும் இது உங்களுடைய மன தெளிவை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை பராமரித்து, உங்களை எப்பொழுதும் ஆக்டிவாகவும், தற்போதைய தருணத்திலும் வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே ஸ்கிரீன் நேரத்தை குறைப்பதற்கு உதவும் ஒரு சில யுக்திகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

*தொடர்ந்து ஸ்கிரீன் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் உங்களுடைய மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதற்கும் வழக்கமான முறையில் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.

*சோஷியல் மீடியா அல்லது கேமிங் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதற்கு தற்காலிக கட்டுப்பாடு விதித்து கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக உங்களுக்கு அதிக கவனம் தேவை என்ற சமயத்தில் இதனை நீங்கள் செய்யலாம்.

*ஸ்கிரீன் நேரத்தை ஒரு சில ஆஃப்லைன் செயல்பாடுகளோடு ஈடுகட்டுங்கள். உதாரணமாக, புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது அல்லது பிறரோடு பேசுவது போன்றவை இதில் அடங்கும்.

*உங்களுடைய ஸ்கிரீன் நேர இலக்குகள் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*நல்ல ஒரு ஆதரவு தரும் சூழலை உருவாக்குவதன் மூலமாக அனைவருமே ஆரோக்கியமான போன் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கு உதவி செய்யுங்கள்.

*தேவையில்லாத அப்ளிகேஷன்களின் நோட்டிஃபிகேஷன்களை டர்ன் ஆஃப் செய்து வையுங்கள்.

*உணவு மற்றும் குறிப்பிட்ட சில சமயங்கள் அதாவது தூங்குவதற்கு முன்பு போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

*குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்களுக்கு நீங்கள் டெய்லி டைம் லிமிட்டுகளை அமைக்கலாம். இதற்கு நீங்கள் ஸ்கிரீன் டைம் அல்லது டிஜிட்டல் வெல்பீயிங் போன்ற டூல்களை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: குளிர் காலத்திலும் ஃபுல் எனர்ஜயோட இருக்க உங்க டயட்ல இது இருந்தா போதும்!!!

*வேலை அல்லது தகவல் தொடர்புக்கு அத்தியாவசியமான அப்ளிகேஷன்களை அடையாளம் கண்டு, அதில் அதிக ஸ்கிரீன் நேரத்தை செலவு செய்யவும்.

*தேவையில்லாத அப்ளிகேஷன்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

*ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் நீங்கள் பயன்படுத்தும் இந்நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 50

    0

    0

    Leave a Reply