தாய்ப்பால் கொடுக்கும் போது மறக்காம இந்த ஹைஜீன் டிப்ஸ் ஃபாலோ பண்ணிடுங்க!!!
Author: Hemalatha Ramkumar19 November 2024, 6:26 pm
தாய்ப்பால் கொடுப்பது என்பது குழந்தைக்கு தேவையான உஷாத்தையும் வழங்குவது மட்டும் அல்லாமல், தாய் மற்றும் குழந்தை இடையே ஒரு அற்புதமான பந்தத்தை உருவாக்குகிறது. உங்களுடைய தாய்ப்பால் கொடுக்கும் பயணத்தை சௌகரியமானதாகவும், சுகாதாரம் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு உங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத்திற்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனவே இந்த பதிவில் தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் பின்பற்ற வேண்டிய சில தனிநபர் சுகாதார நடவடிக்கைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் பால் கொடுக்கும் பொழுது தாய்ப்பால் உங்கள் ஆடைகளில் கசிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அடிக்கடி உங்களுடைய ஆடைகளை மாற்றுவது நல்ல சுகாதாரத்தை பராமரித்து பாக்டீரியா மற்றும் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். அதிலும் குறிப்பாக உங்கள் மார்பகங்கள் மற்றும் குழந்தையின் மென்மையான சருமத்தில் எரிச்சல்கள் அல்லது தொற்றுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு இது அவசியம்.
எப்பொழுதும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு உங்களுடைய மார்பகங்களை துடைப்பது அவசியம். ஏனெனில் நம்முடைய சருமத்தில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கலாம். இதற்கு நீங்கள் பிரத்தியேகமாக ஆல்கஹால், வாசனை, பாராபன் மற்றும் பீனாக்ஸி எத்தனால் இல்லாமல் தயாரிக்கப்பட்ட பிரஸ்ட் வைப்ஸ் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் பிரஸ்ட் பைப்ஸ் தோல்ரீதியாகவும், நுண்ணுயிரிகள் ரீதியாகவும் சோதனை செய்யப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் ஒரு காட்டன் துணியை வெந்நீரில் முக்கி அதனை கொண்டு உங்களுடைய மார்பகங்களை துடைத்து எடுக்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் பொழுது குழந்தையானது உங்களுடைய முளைக்காம்புகளுக்கு மிக அருகில் இருக்கும். எனவே மார்பக பகுதியில் எந்தவிதமான வாசனை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அவற்றில் உள்ள ஒரு சில கெமிக்கல்கள் அல்லது அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள் குழந்தையின் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். மேலும் அது தவறுதலாக குழந்தையின் வாய்க்குள் நுழைந்து விட்டால் அதனால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்கலாமே: சியா விதைகளை இந்த மாதிரி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்!!!
ஒருவேளை நீங்கள் பிரஸ்ட் பம்ப் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய பிரஸ்ட் பம்பை அவ்வப்போது சுத்தம் செய்வது மிக மிக அவசியம். ஏனெனில் ஊட்டச்சத்து நிறைந்த தாய்ப்பாலில் உள்ள சிறிய அளவிலான பாக்டீரியா மிக விரைவாக வளர்ச்சி அடைந்து பாலை கெட்டுப்போக செய்யலாம். ஆகவே எந்தவிதமான பாக்டீரியா வளர்ச்சியை தவிர்ப்பதற்கு பிரஸ்ட் பம்பை நீங்கள் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
உங்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்துவதற்காகவே நர்சிங் பிராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை எளிதாக நீங்கள் மூடலாம் அல்லது திறக்கலாம். அதே நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது சுகாதாரத்தை பேணவும் இது உதவுகிறது. இந்த பிராக்களை நீங்கள் அணிந்து கொள்ளும் பொழுது உங்கள் கைகளில் இருந்து மார்பகங்கள் அல்லது குழந்தையின் வாய்க்கு கிருமிகள் மாற்றப்படுவதை தவிர்க்கலாம்.
எப்பொழுதும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவும். இந்த எளிமையான விஷயத்தை செய்வதன் மூலமாக நீங்கள் கிருமிகள் பரவுவதை தவிர்த்து தொற்றுகளில் இருந்து உங்கள் பிள்ளையை பாதுகாக்கலாம். மேலும் உங்களுடைய மார்பகங்களில் சிவத்தல் அல்லது ஏதேனும் திரவங்கள் வெளியேறுதல் போன்ற தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா என்பதை அவ்வப்போது கவனிப்பது அவசியம். ஒருவேளை இயல்பை விட ஏதாவது மாற்றத்தை கவனித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.